அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு! - படங்கள்

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர்களான சுகிர்தன், அனந்தி சசிதரன், கஜதீபன், சித்தார்த்தன், அரியரட்ணம், ஆர்னோல்ட், பசுபதிப்பிள்ளை ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 நிகழ்வில் வடக்கு மாகாண சபைக்குரித்தான அதிகாரங்கள், அவற்றில் ஆளுநரின் தலையீடுகள், போன்றன குறித்து முதலமைச்சர் கருத்துத் தெரிவித்தார். 

 மேலும் ஆளுநரை மாற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு தெரியப்படுத்தவில்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளித்த முதலமைச்சர், அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது எனவும், மக்களுடைய ஆணையை மதித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றார்.













வடக்கு மாகாண சபை முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு! - படங்கள் Reviewed by Admin on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.