தமிழக மீனவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை; கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவிப்பு
இலங்கை கடற்பரப்புக்குள் தமிழக மீனவர்கள் அத்துமீறும் செயல்களை கட்டுப்படுத்த தாம் தமிழகம் சென்று பேச்சு நடத்தப்போவதாக வடமாகாணசபையின் கடற்றொழில்துறை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளுடன் பேசி இந்த விடயத்துக்கு ராஜதந்திர ரீதியில் தீர்வுக்காணமுடியும் தமிழக மீனவர்களின் அத்துமீறலால் வடக்கின் மீனவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் காரணமாக வடக்கின் மீனவர்கள் தமது தொழில்களையே கைவிடும் நிலையும் எதிர்காலத்தில் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை போர்க்காலத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை தமிழ் அகதிகளை காப்பாற்றியுளள்ளனர்.
அவர்களில் பலர் உயிர்களையும் தியாகம் செய்துள்ளனர் எனவே அவர்களை எதிரிகளாக பார்க்காமல் இராஜதந்திர ரீதியில் பிரச்சினையை தீர்க்க தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை; கடற்றொழில் அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவிப்பு
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:

No comments:
Post a Comment