தோல்வியடைந்தோர் சொத்துவிபரங்களை சமர்ப்பிக்காவிடின் வழக்கு
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத்தேர்தல்களில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தங்களுடைய சொத்து விபரங்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்காவிடின் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மூன்று மாகாண சபைக்கான தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களில் சிலர் தங்களுடைய சொத்துவிபரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாகாண சபைகள் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்வதற்கு முன்னரும் தேர்தலில் தோல்வியடைந்த உறுப்பினர் தேர்தல் நிறைவடைந்த மூன்று மாதங்களுக்கு முன்னரும் தங்களுடைய சொத்து விபரங்களை சமர்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோல்வியடைந்தோர் சொத்துவிபரங்களை சமர்ப்பிக்காவிடின் வழக்கு
Reviewed by Admin
on
October 19, 2013
Rating:

No comments:
Post a Comment