மன்ஃ முசலி தேசிய பாடசாலைக்கு தகுதியான அதிபரை நியமிக்கக் கோரிக்கை
புதிதாக தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள முசலி தேசிய பாடசாலைக்கு கல்வியமைச்சின் சுற்று நிருபத்தின் பிரகாரம் பொருத்தமான வாண்மை நிறைந்த ஒருவரை நியமிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
சுற்று நிருபங்களின்படி க.பொ.த.(உ.த) உள்ள பாடசாலையின் அதிபர் பட்டதாரியாகவும் இருக்க வேண்டும்.(அதிபர் தரம் மட்டும் போதாது.)
தேசிய பாடசாலைகளுக்கு அதிபராக,கல்வி நிருவாக சேவையைச் சேர்ந்த தரம் -02 ,தரம் 03 ஐச்சேர்ந்தோர் அல்லது அதிபர் சேவை தரம் 01 ஐச்சேர்ந்தோர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.
இதுதான் கல்வியமைச்சின் சுற்று நிருபச்சட்டம். இலங்கையில் உள்ள அனைத்துத் தேசிய பாடசாலைகளிலும் இச்சட்டப்பிரகாரம் அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று இப்பாடசாலைக்கும் பொருத்தமான அதிபரை நியமிக்க விண்ணப்பங்கள் விரைவில் கோரப்பட வேண்டும்.
கல்வி அமைச்சர் அவர்களும்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும்,வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் அவர்களும்,மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களும்,இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென முசலிப்பிராந்திய பழைய மாணவர்களும், புத்திஜீவிகளும், உலமாக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுகின்றனர்
மன்ஃ முசலி தேசிய பாடசாலைக்கு தகுதியான அதிபரை நியமிக்கக் கோரிக்கை
Reviewed by Admin
on
October 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment