அண்மைய செய்திகள்

recent
-

மன்ஃபுத்ஃறிஷாட் பதியுதீன் ம.வி.மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்து

இன்று ஆசிரியர் தினத்தைக்கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள் அதிபர்கள் அனைவருக்கும் மன்ஃபுத்ஃறிஷாட் பதியுதீன் ம.வி.மாணவர்கள் தமது ஆசிரியர் தின வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கின்றார்கள். உலக உருவாக்கத்தின் அத்திவாரமே ஆசிரியர்கள் தான்.

அந்த ஆசிரிய செல்வங்கள் போற்றிப்புகழப்படும் இந்நன்நாளில் அவர்களது உன்னத சேவைகளை மதித்து அவர்களின் நல்வழி நடக்க மாணவர்களாகிய நாங்கள் திடசங்கட்பம் பூணுகின்றோம். 

குறிப்பாக நூறு வீதம் இடம்பெயர்ந்த மன்னார்,முல்லைத்தீவு மாணவர்களைக்கொண்டு கடந்த 5 வருடங்களுக்கு முன் முன்னாள் ஆசிரியராக இருந்த கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களால் உருவாக்கப்பட்ட எமது பாடசாலை, அதிபர் ஜனாப் எம்.எம்.நஜ்மி அவர்களது சிறப்பான வழிகாட்டலுடன் 65 இற்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகளுடன் மிகச்சிறப்பான கல்விப்பணியாற்றி வருகின்றது. 


இந்த அதிபரின் அயராத முயற்சியினால் ஒவ்வொரு வருடமும் மாணவர்களது சாதனைப்பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு மற்றும் ஏனைய இணைப்பாடவிதானத்திலும் எமது பாடசாலை வியத்தகு சாதனை படைத்து வருகின்றது இதனால் மன்னார் மாவட்டத்தில் இப்பாடசாலை 4 ஆவது இடத்திலும் வடமாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகள் மட்டத்தில் முதலாவது இடத்திலும் திகழ்கின்றது.

எமது பாடசாலை வளர்ச்சிக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம்.எம் சியான் அவர்களும் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகளும் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர் இவ்வாறான சேவை அர்ப்பணிப்புக்கொண்ட அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் இப்பாடசாலையை உருவாக்கித்தந்த அமைச்சர் ஆகியோர் நீண்ட காலம் சிறப்பாக வாழ வேண்டுமென இந்த நந்நாளில் மாணவர்களாகிய நாங்கள் இரு கரம் ஏந்தி இறைவனை பிரார்த்திக்கின்றோம்.இவ்வாறு மேற்படி பாடசாலை மாணவர்கள் வாழ்த்துத்தெரிவித்துள்ளனர்
மன்ஃபுத்ஃறிஷாட் பதியுதீன் ம.வி.மாணவர்கள் ஆசிரியர் தின வாழ்த்து Reviewed by Admin on October 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.