சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க சட்டங்கள் அமுலுக்கு வரவேண்டும்; வலியுறுத்துகிறார் திஸ்ஸ கரலியத்த
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளது என அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார் “குடும்பம் உங்களை பாதுகாக்கும்” என்பதே இம்முறை சர்வதேச சிறுவர் தினமும் "வயோதிபர்களுக்காக வாழ்நாள் முழுவதும் தயார்" என்ற தொனிப்பொருளில் இன்றைய தினம் சிறுவர் மற்றும் முதியோர் தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகின்றது.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் தற்போதுஅதிகரித்துள்ளது. எனினும் இவற்றைக் குறைக்க கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு பொருத்தமான சட்டத்தை கொண்டுவருவதற்கான தேவையும் காணப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானவர்கள் வயோதிபர்கள். அதன்படி 2030 ஆம் ஆண்டளவில் வயோதிபர்களின் எண்ணிக்கை 22 வீதமாக அதிகரிக்கக்கூடும் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க சட்டங்கள் அமுலுக்கு வரவேண்டும்; வலியுறுத்துகிறார் திஸ்ஸ கரலியத்த
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment