அண்மைய செய்திகள்

recent
-

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை

இப்பரீட்சை தரம் 05 மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்.இதற்காகத் தயார்ப்படுத்தப்படும் அனைத்து மாணவர்களும் பின்வரும் தேர்ச்சிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

1.எழுத்துத் தேர்ச்சி
2.வாசிப்புத் தேர்ச்சி
3.கணிதத் தேர்ச்சி
4.கிரகித்தல் தேர்ச்சி
5.அவதானித்தல் தேர்ச்சி
6.தர்க்கத் தேர்ச்சி           
7.அவதானித்தல் தேர்ச்சி      
8.நேரமுகாமைத் தேர்ச்சி

சித்தியடைந்தோர் பெறும் வாய்ப்புக்கள்

9.பிரபல்யமான கல்லூரியில் கற்கும் வசதி
10.சித்திபெற்றோருக்கான மாதாந்த   அரச பணவுதவி

         பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் வெட்டுப்புள்ளி மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது.சில பாடசாலை மாணவர்கள் தேசியமட்டத்திலும்,சிலர் மாவட்ட,மாகாண மட்டத்திலும் அதிக புள்ளிகளைப் பெற்று   வருகின்றனர்.பத்திரிகைகளிலும்,இணையத்தளங்களிலும் சாதனையாளர்களின் புகைப்படங்களை நாளாந்தம் பார்த்து வருகிறோம்.சில பாடசாலைகளில் 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் சித்திடைந்துள்ளனர்.மாறாக சில பாடசாலைகளில் ஒருவரும் சித்திடையாத நிலைமையும் காணப்படுகிறது.


பாடசாலை மாணவர்கள் அதிகம் புள்ளி பெறுவதற்கு பின்வருவனவற்றைக் காரணங்களாகக் கூறலாம்.                                                         

.தேர்ச்சி பெற்ற சிறந்த ஆசிரியர்கள் கற்பிக்கின்றமை
அதே ஆசிரியர் பிற்பகலிலும் கற்பிக்கின்றமை
அடிக்கடி மாதிரிப்பரீட்சை நடாத்துகின்றமை
பிரபல்யமான ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்களைப் பெற்று பாவிக்ன்றமை                                                
 தரம் 3,தரம் 4, வகுப்புக்களுக்கும் சிறப்புத்தேர்ச்சி பெற்ற  ஆசிரியர்கள் கற்பிக்கின்றமை
தரம் 5 மாணவர்களின் தேர்ச்சி மட்டத்தை அளவிட ஆரம்பக்கல்வி ஆலோசகர்களும்,ஆரம்பக்கல்வி அதிகாரிகளும் அடிக்கடி பாடசாலைகளைத் தரிசித்தல்
பாடசாலையில் ஆரம்பப்பிரிவு சிறப்பாக இயங்குதல்
தரம் 5 பரீட்சை தொடர்பாக பெற்றோர்களை விழிப்படையச் செய்தல்
சில சமூக சேவை நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளல் 
 உ.ம். சுடரொளி, விஜய்,ஜீனியஸ் போன்ற பத்திரிகைகள்,அகரம் சஞ்சிகை போன்றவற்றை வாசிக்க வழிகாட்டல்

          பாடசாலைகளின் தரத்தை அறிவதற்கு பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளே பயன்படுத்தப்படுகின்றன.க.பொ.த.(உ.த),க.பொ.த.(சா.த),தரம் ஐந்து .இப்பரீட்சையின் பெறுபேறுகள் உயர்வாக இருந்தால் பாடசாலையின் பெயரும்,அதிபர்,ஆசிரியர்களின் சிறப்பும் சமூகத்தால் பாராட்டப்படும்.மாறாகப் பரீட்சைப் பெறுபேற்றில்  வீழ்ச்சி ஏற்பட்டால் பாடசாலை சமூகத்தினர் பாரிய நெருக்கடிகளையும்,விமர்சனங்களையும் எதிர்கொள்ளவேண்டி வரும்.

 குறிப்பாக வடமாகாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் தரம் 5 பரீட்சையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை அறியமுடிகிறது.வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கட்கு இது ஒரு பாரிய இழப்பாகும்.புலமைப்பரிசிலில் சித்தியடையும் மாணவர்ட்கு தொடர்ந்து  கல்வி கற்பதற்கு அரசால் மாதாமாதம் வழங்கப்படும் பணத்தொகை பெரும் உதவியாகும்.


  இவ்வாறு சில பாடசாலைகளின் பெறுபேற்று வீழ்ச்சிக்கு யார் ? காரணம். இதனை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதை பெற்றோரும், புத்திஜீவிகளும், பழயமாணவர்களும், அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பனர்களும், மாகாணசபை உறுப்பினர்களும்,கல்வி அதிகாரிகளும் ஒன்றிணைந்து பொருத்தமான தீர்வைக் காணவேண்டும்.

எமது பொருத்தமான துரித நடவடிக்கை 2014 ல் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுத்தரும்.இதைச் செய்ய நாம் தவறுவோமாயின் வருமானம் குறைந்த மாணவர்களுக்கான வரப்பிரசாதத்தை இழந்த கதையாகிவிடும்.

 முசலியூர் .கே.சி.எம.அஸ்ஹர்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை Reviewed by Admin on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.