லங்கா சித்த ஆயுர்வேத கல்லூரிக்கு வடமாகாண சபை உதவ முன்வரவேண்டும். வட இலங்கை சுதேச வைத்திய சபையின் செயலாளர் கோரிக்கை.
இலங்கையில் அரசின் அனுமதியுடன் நீண்ட காலமாகச் செயற்பட்டு வருகின்ற ஒரே ஒரு
தனியார் ஆயுர்வேத வைத்தியக் கல்லூரி யாழ் . லங்கா சித்த ஆயுர்வேத வைத்தியக் கல்லூரியே ஆகும் என்று வட இலங்கை சுதேச வைத்திய சபையின் செயலாளர் டாக்டர் ஜெ . ஜெயலன் தெரிவித்தார் .
சுன்னாகத்தில் உள்ள இக் கல்லூரியின் நூலக மண்டபத்தில் இடம்பெற்ற கல்லூரி யின் மாணவர் மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
மாணவர் மன்றத் தலைவர் மதீசன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சிற ப்பு விருந்தினராக டாக்டர் க . திருலோகமூ ர்த்தி கலந்து கொண்டார் . இந் நிகழ்வில் டாக்டர் ஜெ . ஜெயலன் தொடர்ந்து உரையா ற்றுகையில் ,
இலங்கையில் முதன்முதலாக ஆரம்பிக்க ப்பட்ட இவ் வைத்தியக் கல்லூரியின் நலனி லும் அபிவிருத்தியிலும் அரசும் சுகாதார சுதேச வைத்திய அமைச்சும் ஆயுர்வேத திணைக்களமும் வடமாகாண சபையும் அக்கறையுடன் ஆக்கபூர்வமான உதவிகளை வழங்கி வருகின்றன .
இக்கல்லூரிக்கான டீ.ஏ. எம் . பட்டப் பரீட்சைகளை அரசே நடத்தி வருகின்றது . வடமா காண சபை கல்லூரியை நிர்வகிக்க நிதியை வழங்கி வருகின்றது . இந்நிதி ஒதுக்கீடு கல்லூரியை நிர்வகிக்கப் போதுமானதாக இல்லை . புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை எமக்கு வழங்கிவரும் நிதியை அதிகரிக்க முன்வர வேண்டும் . அப்போதுதான் விரிவுரையாளர்கள் , அதிபர் , உப அதிபர் , உத்தியோகத்தர் ஆகியோரது சம்பளத்தையும் அதிகரிக்க முடியும் .
அத்துடன் ஐந்து ஆண்டுகள் டீ.ஏ. எம் . கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வைத்தியர்களாக கால்பதிக்கும் எமது பட்டதாரிகளுக்கு புதிய வடமாகாண சபை நிர்வாகம் வேலை வாய்ப்புக்களை வழங்க முன்வர வேண்டும் . ஏற்கனவே எமது பட்டதாரி வைத்தியர்கள் கைதடி சித்த போதனா வைத்தியசபை உட்பட உள்ளூராட்சி மன்ற வைத்திய சபைகளிலும் சிறப்பான முறையில் கடமையாற்றியதையும் கவனத்தில் கொள்ளு மாறும் வேண்டுகின்றேன் . மாணவர்கள் ஒன்றுபட்டு கல்லூரியின் மேம்பட்டிற்காக பாடுபட முன்வர வேண்டும் என்றார் .
லங்கா சித்த ஆயுர்வேத கல்லூரிக்கு வடமாகாண சபை உதவ முன்வரவேண்டும். வட இலங்கை சுதேச வைத்திய சபையின் செயலாளர் கோரிக்கை.
Reviewed by Admin
on
October 16, 2013
Rating:

No comments:
Post a Comment