அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரிகள் இல்லை. பிரதேச மக்கள் அசெளகரியம்.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இல்லாமையினால் இப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் . 

 கடந்தகால யுத்தம் நிறைவடைந்து 2009 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் இயங்கிவருகின்ற இவ் வைத்தியசாலையில் கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி இல்லாத நிலை காணப்படுகின்றது . மரணச்சான்றிதழ் , விபத்து சார்ந்த அறிக்கைகள் , வழக்குகள் சார்ந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் சட்டவைத்தியரின் தேவை காணப்படுகின்றது 

. இந்த அதிகாரி இல்லாமையினால் இவ் வைத்தியசாலைக்குச் செல்கின்ற மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் . மேலும் சட்ட வைத்திய அதிகாரி இல்லாமையினால் அனுராதபுரம் , வவுனியா வைத்தியசாலைகளுக்குச் செல்லவேண்டி உள்ளதாகவும் அத்துடன் விபத்துக்கள் மற்றும் குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் , வழக்குகள் ஆகியவற்றின் அறிக்கைகளைப் பெறமுடியாத நிலையும் காணப்படுகின்றது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் . 

 எனவே , முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விரைவில் சட்ட வைத்தியரை நியமிக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரிகள் இல்லை. பிரதேச மக்கள் அசெளகரியம். Reviewed by Admin on October 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.