சுயதொழில் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மன்னாரில் - படங்கள்
சுய தொழில் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு மன்னார் மாவட்ட மீனவ ஒத்தழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
குறித்த நிகழ்வு மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
பெண்களை தலமைத்துவமாகக் கொண்ட குடும்பபெண்களுக்கு 2வது கட்டமாக குறித்த சுய தொழில் உபகரணம் வழங்கப்படவுள்ளது.
2003ம் ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் சேவைபுரியும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தனது சேவையை மக்கள் மத்தியில் விரிவுப்படுத்தி வருகிறது.
இதில் ஒரு அங்கமாக பெண்களை தலமைத்துவமாகக் கொண்ட குடும்பபெண்களுக்கு 2வது கட்டமாக சுய தொழில் உபகரணம் வழங்கிவைக்கப்படவுள்ளது.
இந் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வணபிதா ஜெயபாலன்.குரூஸ் கலந்து கொண்டு சுய தொழில் உபகரணங்களை வழங்கிவைத்தார்.
கௌரவ விருந்தினராக திரு.அ.டியூக்.குரூஸ் (மாவட்ட இளைஞர் சேவைஅதிகாரி-மன்னார்)
வணபிதா. செபமாலை (பிரஜைகள் குழு தலைவர் - மன்னார்)
சிறப்பு விருந்தினர்கள் திரு.கேமன் குமார( தேசியமீனவஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும் உலகமீனவ சம்மேளனத்தின் விசேட பிரதிநிதியும்)
திருமதி. கீதாலக்மினி. பெர்னான்டோ (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பரிபாலன நிர்வாக செயலாளர்)
திரு.அன்ரனி ஜேசுதாசன்( வடகிழக்குபொது இனைப்பாளர்)
திரு.பிரியங்கரகொஸ்தா(இடம் பெயர்ந்தமக்களுக்கானபொது இணைப்பாளர்)
திரு.பிரதீப் வணிகசூரிய (வரவுசெலவுதிட்ட இணைப்பாளர்)
ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்நிகழ்வில் 84 பயனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்படி 7 பேருக்கு துவிச்சக்கரவண்டிகள், 6 பேருக்கு இடியப்பம் செய்யும் உபகரணங்கள்,34 பேருக்கு கோழிகுஞ்சுகளும் கூடுகளும்,3பேருக்கு மிக்சர் உபகரணம்,34 பேருக்கு ஆடுகள், 5 பேருக்கு வள்ளங்களும் வலைகளும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை முதற்கட்டமாக கடந்த 8ம் திததி 19 பேருக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.
சுயதொழில் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று மன்னாரில் - படங்கள்
Reviewed by Admin
on
October 19, 2013
Rating:
No comments:
Post a Comment