அண்மைய செய்திகள்

recent
-

2015 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானம்

2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பல தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாங்களிலிருந்து தெரியவருகின்றது.

 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலும் மூன்று தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 தேர்தல்களை எந்தெந்த காலங்களில் நடத்துவ என்பது தொடர்பில் அரசாங்கத்தின் அரசியல் ஆலோசகர்கள் தயாரித்த அட்டவணைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்பிரகாம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன.

 இந்த தேர்தல்களுக்காக அவ்விரு மாகாணங்களும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கலைக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊவா மாகாண சபை 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இறுதியில் கலைக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்தில் அந்த மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

 இவ்வாறான நிலையிலே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015 இல் ஜனாதிபதி தேர்தலை நடத்த தீர்மானம் Reviewed by Admin on October 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.