சீரற்ற காலநிலையால் ஒருவர் பலி: 2032 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையினால் ஒருவர் பலியானதுடன் 2032 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது
.
காலி,களுத்துறை,கொழும்பு, அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 425 குடும்பங்களைச்சேர்ந்த 2032 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 64 வீடுகள் முழுமையாகவும் 389 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் நேற்றுவரையே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் நிலையம் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள்pல் 37 குடும்பங்களைச்சேர்ந்த 164 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காலியில் பெய்த கடுமழையினாலே ஒருவர் மரணமடைந்துள்ளதாக நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் ஒருவர் பலி: 2032 பேர் பாதிப்பு
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment