வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு மன்னாரில் இன்று அமோக வரவேற்பு.
வடமாகாண சபை தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீன்பிடி,போக்குவரத்து,கைத்தொழில்,வர்த்தகம்,வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்ற அமைச்சர் சட்;டத்தரணி வி.டெனிஸ்வரனுக்கு இன்று சனிக்கிழமை (12-10-2013) காலை மன்னாரில் பாரிய வரவேற்பளிக்கப்பட்டது.
-இன்று காலை மன்னார்; பிரதான பாலத்தில் இருந்து குறித்த வரவேற்பு நிகழ்வு இடம் பெற்றது.இதன் போது நான்கு பாடாசாலை மாணவர்களின் பேன்ட் இசை வாத்தியக்குழுவின் வாத்தியங்கள் முழங்க அமைச்சர் மற்றும் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் வரவேற்கப்பட்டனர்.
-இதனைத் தொடர்ந்து மன்னார் பஸார் பகுதியில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அனுவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊர்வலமாக மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) அலுவலகத்தில் அமைச்சருக்கும்,வேட்பாளர்களுக்கும் பாரிய வரவேட்;பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு டெலோ வின் முன்னால் தலைவர் சிறிசபாரெத்தினம் மற்றும் தளபதிகளான தங்கத்துரை,குட்டிமணி ஆகியோரது உறுவப்ப்டத்திற்கு அமைச்சர் மலர் மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் விசேட திருப்பலிகளும் இடம் பெற்றது.
-மன்னார் நிருபர் &லுயிஸ் மார்சல்
வடமாகாண அமைச்சர் சட்டத்தரணி டெனிஸ்வரனுக்கு மன்னாரில் இன்று அமோக வரவேற்பு.
Reviewed by NEWMANNAR
on
October 12, 2013
Rating:
No comments:
Post a Comment