அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பயிர்ச் சிகிச்சை முகாம்

பயிர்ச் சிகிச்சை முகாம் வவுனியா, கோவில்குளம் கமநல கேந்திர நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வவுனியா மாவட்ட விவசாயிகளின் பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து அவர்களது உற்பத்தியை ஊக்கிவிக்கும் நோக்கில் இந்த பயிர்ச் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

 இந்தப் பயிர்ச் சிகிச்சை முகாம் தொடர்பாக விவசாயத் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஏ.சகிலாபானு தெரிவிக்கையில், இன்று விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளில் நோய்த்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப முறைகள் தொடர்பில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதன் காராணமாக அவர்களது விளைச்சலின் அளவும் குறைவடைந்து அதை நம்பி வாழும் குடும்பங்களின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது. எனவே, இப்பிரச்சினைகளை இலகுவாக தீர்க்கும் பொருட்டு மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை தொடக்கம் எமது பகுதியில் உள்ள 10 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளிலும் தொடர்ச்சியாக இந்த பயிர்ச் சிகிச்சை முகாமினை நடத்தி வருகின்றோம். 


இதனடிப்படையில், வவுனியா கோவில்குளம் கமநலகேந்திர நிலையத்தில் பயிர்ச் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இதில் பல விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது எனக் கூறினார்.
வவுனியாவில் பயிர்ச் சிகிச்சை முகாம் Reviewed by Admin on October 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.