அண்மைய செய்திகள்

recent
-

பதட்ட நிலையில் பொன்தீவுகண்டல் -படங்கள்


பொன்தீவுகண்டல் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் பதட்ட நிலை ஏற்பட்டு சமரச பேச்சின் மூலம் கைகலப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது.

பொன்தீவுகண்டல் பகுதியில் பிறமதத்தை சேர்ந்த மக்களுக்கு 55 வீட்டுத்திட்டமும் அதேபோன்று பொன்தீவுகண்டல் கத்தோலிக்க மக்களுக்கு 4 வீட்டுத்திட்டமும் 33 காணி துண்டுகளும் வழங்கப்பட்டுள்ளது

எனினும் சரியான முறையில் வீட்டுத்திட்டம் பகிரப்படவில்லை எனவும் பிற மதத்தவரை அப்பகுதியில் குடியேற்ற தடை செய்யக் கோரியும் பொன்தீவுகண்டல் மக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கதோலிக்க கிராமமாகிய பொன்தீவுகண்டல் பகுதியில் வேற்று மதத்தவரை குடியமர்த்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிப்பு தெரிவித்து பொன்தீவுகண்டல் மக்களால் நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன் நடத்தப்பட்ட எதிப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து பொன்தீவுகண்டல் பகுதியில் நடைபெற்று வரும் வேலைகளை உடனே நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நானாட்டான் பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பந்தபட்ட பகுதிக்குச் சென்ற நானாட்டான் பிரதேச செயலாளர் தீர்மானம் தொடர்பாக குறித்த பகுதியில்  காடுகளை அளித்து வீடுகளை கட்டுவதற்கான நடவடிகடகையில் ஈடுபட்டிருந்த பிற மதத்தவருக்கு தெரிவித்தார்.

இந் நிலையில் எதிர்வரும் புதன் கிழமை இது தொடர்பான முடிவெடுக்கும் சந்திப்பொன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது அதுவரை குறித்த பகுதியில் நடைபெற்றுவரும் வேலைகளை உடன் நிறுத்துமாறு பணிக்கப்பட்டது.
 இதனை அடுத்து நடைபெற்ற சமரச பேச்சின் மூலம் அதற்கு குறித்த பிறமதத்தை சேர்ந்தவர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக இப்பகுதியில் பொன்தீவுகண்டல் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்படுகிறது குறித்த பகுதியில் சேமக்காலை , கோவில் ,நெல்லடிக்கும் தளம் என்பன காணப்படுகின்றது.

இந் நிலையில் பொந்தீகண்டல் மக்கள் குறித்த பிற மதத்தவரை அப்பகுதியில் குடியமர்த்துவதற்கு தமது கடும் எதிப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த பகுதியில் பிறமதத்தவரால் வெட்;டப்பட்ட மரங்களின் கொப்புகள் சேமக்காலையின் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளுக்கு அருகிலும்,மேலாகவும் போடப்பட்டு எரியூட்டப்பட்டதை  கத்தோலிக்க மக்கள் கண்டிப்பதோடு அப்பகுதியில் இருந்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும் படி கோரிவருகின்றனர்.

கல்லறைகள் மீது செய்யப்பட்ட அவமரியாதை மிகவும் வேதனைக்குரியது என தெரிவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க வேலைகள் நிறுத்தப்பட்டாலும்  குறித்த பகுதியில் நடைபெற்றுவரும் வேலைகளுக்கென வெளி மாவட்டங்களில் இருந்து கருங்கற்கள் தருவிக்கப்பட்டுள்ள நிலையில் கொண்டுவரப்பட்ட கருங்கற்களை குறித்த பகுதியில் இறக்குவதற்கு பொன்தீவுகண்டல் மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு கூக்குரலிட்டு அதை நிறுத்த முயற்ச்சி செய்தனர்.

இந்ந நிலையில்; ஆத்திரமடைந்த பிற மதத்தவர்கள் கைகளில் கத்தி , மண்வெட்டி ,பொல்லுகள் போன்றவற்றால் பொன்தீவுகண்டல் மக்களை தாக்க முயற்சித்தனர்.
 இதனை அடுத்து பதட்ட நிலை தோன்றியது
எனினும் இரு பகுதியை சேர்ந்த பெரியோரின் முயற்ச்சியினால் சமரசப்படுத்தப்பட்டு கைகலப்பு தவிர்க்கப்பட்டது.

எனினும் முருங்கன் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அப்பகுதியி;ல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லுயிஸ் மாசல்
























பதட்ட நிலையில் பொன்தீவுகண்டல் -படங்கள் Reviewed by Author on October 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.