அண்மைய செய்திகள்

recent
-

குர்ஷித்தின் இலங்கை விஜயத்துக்கு எதிராக இந்திய விவசாயி தீக்குளிப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் செல்லப் போவதாகக் கூறியதை அடுத்து, அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவின் சார்பில் யாரும் காமன்வெல்த் மாநாட்டின் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி விவசாயி ஒருவர் இன்று திடீரென தீக்குளித்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னகவுண்டம்பட்டியைச் சேர்ந்த விவசாயி, ஜெயபால் (43), நேற்று காலை திடீரென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். 

அப்போது அவர், இலங்கைக்கு இந்தியாவின் சார்பில் யாரும் செல்லக் கூடாது என்றும், கிருஷ்ணகிரி கேஆர் அணையில் இருந்து திண்டல் வழியாக வரும் பாசனக் கால்வாயினை அரூர் வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தார். 

பணியில் இருந்த போலீஸார், அவரைத்தடுத்து உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

குர்ஷித்தின் இலங்கை விஜயத்துக்கு எதிராக இந்திய விவசாயி தீக்குளிப்பு Reviewed by Author on October 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.