வண.ஆயர் தலமையிலான உயர் மட்ட குழு இன்று பொன்தீவுகண்டல் பகுதியிற்கு சென்று நிலமைகனை நேரில் பார்வையிட்டனர்
பொன்தீவுகண்டல் பிரதேசத்தில் அரசியல் ரீதியான அனுகுமுறைகளின் மூலம் அப்பிரதேசத்தின் காணிகள் வேற்று மதத்தவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை கண்டித்து கடந்த திங்கள்கிழமை நானாட்டான் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று பொன்தீவுகண்டல் மக்களால் நடத்தப்பட்டிருந்தது.
இன் நிலையில் குறித்த ஆப்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பின் பிறிமுஸ் சிராய்வா நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற குறித்த பிரச்சினை தொடர்பான கூட்டம் ஒன்றிலும் கலந்துகொண்டார் .
அதன்பின் பிரச்சினைக்குரிய பொன்தீவுகண்டல் பகுதியிற்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு சம்பந்தப்பட்ட இரு தரப்பினரிடமும் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இன் நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டநிலையில் இன்று காலை மன்னார் ஆயர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒன்று குறித்த பகுதியிற்கு சென்ற குறித்த பகுதியினை பார்வையிட்டதோடு மக்களை சந்தித்து பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர்.
இக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வட மாகாண உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா மற்றும் குணசீலன் ,அருட்தந்தை சுரேஸ்,நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரையா,காணி அதிகாரி மற்றும் உயர்அதிகாரிகள் கலந்த கொண்டனர்.
இதன்போது மக்கள் தெரிவிக்கையில் பூவரசங்குளம் பகுதியிலுள்ள பிறமதத்தவரை பொன்தீவுகண்டல் பகுதியில் குடியமர்த்த அரச உயர் அதிகாரிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக பொன்தீவுகண்டல் மக்கள் பரம்பரை பரம்பரையாக குறித்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்பகுயில் எமது சேமக்காலை ,கோயில் போன்றன காணப்படுகின்றது. எனினும் அதை பொருட்படுத்தாமல் அரச அதிகாரிகள் பக்கசார்பாக நடந்து கொள்கிறார்கள் எனவே எமது நிலையினை கருத்திற் கொண்டு பிற மதத்தவரை இங்கு குடியமர்த்துவதை மீளாய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதோடு ஏற்கனவே கூறியபடி தங்களுக்குரிய காணிகளை தங்களுக்கே தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட ஆயர் தலைமையிலான உயர்மட்ட குழு நாளை நடைபெறவிருக்கும் குறித்த பிரச்சினை தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இன்று நடைபெறவிருந்த குறித்த கூட்டம் நாளை பிற் போடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
வண.ஆயர் தலமையிலான உயர் மட்ட குழு இன்று பொன்தீவுகண்டல் பகுதியிற்கு சென்று நிலமைகனை நேரில் பார்வையிட்டனர்
Reviewed by Author
on
October 30, 2013
Rating:
No comments:
Post a Comment