பொதுநலவாய மாநாடு தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்வு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டம் நேற்று மாலை யாழ். நகரில் நடைபெற்றுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி
ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சரவணபவன் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிங்கம் மற்றும் ஹென்ரி மகேந்திரன், ராகவன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி; விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளின் மகாநாடு சம்பந்தமான விடயங்கள் தொடர்பிலும் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவின் கூட்டத்தினை கொழும்பில் நடத்துவதென்றும் இக்கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.
பொதுநலவாய மாநாடு தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்வு
Reviewed by Author
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment