புத்தளம் - அநுராதபுரம் விபத்தில் மூவர் பலி: ஐவர் படுகாயம்

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (26) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் எட்டு மாத குழந்தை ஒன்றும் அடங்குவதாக புத்தளம் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒருவர் விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பேயிலிருந்து அநுராதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த வேன் இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம் - அநுராதபுரம் விபத்தில் மூவர் பலி: ஐவர் படுகாயம்
Reviewed by Author
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment