அண்மைய செய்திகள்

recent
-

தென்னிலங்கை பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப்

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேனிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம் என வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை (18.10.13) இரவு நடாத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் மேற்கண்டவாறு கூறினார்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தின் மூலம் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார்.

இதன் போது அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுரையாற்றினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் ஏ.எல்.எம்.சபில் நழீமி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களை காட்சிப் பொருளாக வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியலை செய்தது. இதன் மூலம் 1994 ஆம் ஆண்டு வடமாகாணத்தில் யாழ்ப்பானத்திலும், வன்னியிலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது.

அதே போன்று வடக்கு முஸ்லிம்களை காட்டி வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு இதுவரை என்ன நடந்தது என்பது தெரியாமலுள்ளது. ஆனால், வட மாகாண முஸ்லிம்களின் நிலையில் இன்னும் மாற்றம் எற்பட வில்லை.

புத்தளத்திற்கு சென்று பார்த்தால் வடமாகாண முஸ்லிம் அகதிகளின் நிலை நன்கு விளங்கும்.

வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினை என்பது இந்த நாட்டிலுள்ள தேசிய முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினையாகும். இது சர்வதேச முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினையாகும்.

எங்களுக்குள்ளேயே இருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய பிரதிநிதியும் வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்காக உழைப்பார் என எதிர்பார்த்தோம் ஆனால் அதுவும் நடக்கவில்லை.

வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என சரியாக பேசுகின்ற எந்த ஆவனமும் செய்யப்படாத நிலையில் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பும் செய்து கொண்ட உடன் படிக்கையின் மூலம் வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள் என சரியாக பேசுகின்ற வரலாற்று ரீதியான ஆவனத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

இது வட மாகாண முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல தேசிய ரீதியாக முஸ்லிம்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரலாற்று அடையாளமாக நாம் இதை பார்க்க முடியும். இந்த மகத்தான வரலாற்று பொறுப்பை  காத்தான்குடியிலிருந்து உதயமான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற் கொண்டுள்ளது என்பதை நினைத்து காத்தான்குடி முஸ்லிம்கள் மாத்திரமல்ல இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டும்.
இதற்காக காத்தான்குடி மக்களுக்கு வடமாகாணத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் நான் நன்றி கூறுகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் செய்து கொண்ட உடன் படிக்கையில் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு செய்த வரலாற்றுரீதியான தவாறகும்.

வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேயற்றத்தில் கவனம் செலுத்துவதும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் எமக்கு எதிர்காலத்தில் உள்ள வேலைத்திட்டமாகும்.

வடக்கிலிருந்த முஸ்லிம்களை நூறு வீதம் மீளக் குடியேற்ற முடியாவிடினும். வடக்கில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடங்களை பாரம்பரிய பூமியென அடையாளப்படுத்தப்படுவதுடன் மீள்குடியேறலாம் என்ற சூழலை உருவாக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேணிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இனைணந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம் என அவர் இதில் மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சி தலைவருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், அமீர் அஸ்ஸெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, ஊடக பேச்சாளர் அஸ்ஸெய்க் எம்.நஜா இஸ்லாஹி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தென்னிலங்கை பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம்-வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் Reviewed by NEWMANNAR on October 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.