பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை
15 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளுக்கும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ். சரத் குமார தெரிவித்துள்ளார்.
புதிய இலத்தரனியல் அடையாள அட்டைகளின் அறிமுகத்தோடு புதிய நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இலங்கையில் 16 வயது நிரம்பியவர்களுக்கே தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படுகிறது.
இதற்கமைய 15 வயது நிரம்பிய அனைத்துப் பிரஜைகளுக்கும் இலத்திரனில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான சட்டங்களை வகுத்து வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:

No comments:
Post a Comment