பண்டாரவன்னியன் சிலை வளாகம் சேதம்
வவுனியா மாவட்ட செயலகப் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் பண்டார வன்னியனின் சிலை அமைந்துள்ள வளாகத்தைச் சேர்ந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மின் திருத்த வேலைகளை மேற்கொண்ட சிலர் அங்கிருந்த மரங்கை வெட்டி சிலைப்பகுதியில் வீழ்த்தியுள்ளதாகவும் அதன் காரணமாக அண்மையில் புனரமைப்பு செய்யப்பட்ட வளாகத்தின் வேலிகள் மின்குமிழ்கள் என்பன உடைந்துள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டை தாம் கண்டிப்பதாகவும் வெட்டப்பட்ட மரங்கள் இரண்டு நாட்களுக்கு மேலாக அகற்றப்படாது பண்டார வன்னியனின் சிலை உள்ள வளாகம் அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மின்சார சபையினர் இது தொடர்பில் அக்கறை செலுத்தி மேற்படி வளாகத்தை புனரமைப்பு செய்யாத பட்சத்தில் தாம் அறவழிப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
பண்டாரவன்னியன் சிலை வளாகம் சேதம்
Reviewed by NEWMANNAR
on
November 11, 2013
Rating:

No comments:
Post a Comment