அண்மைய செய்திகள்

recent
-

யாழ். கல்வியங்காடு பகுதியில் ஆலயத்தில் தெய்வ விக்கிரகங்கள், வெண்கல உபகரணங்கள் திருட்டு படங்கள்

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள நல்லூர் வடக்கு அருள்மிகு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தில் பெறுமதியான தெய்வ விக்கிரகங்கள் மற்றும் வெண்கல உபகரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளன.

 இத் திருட்டு சம்பவத்தில் எழுந்தருளி விக்கிரகம் பிள்ளையார் உட்பட சுமார் 3 இலட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன. இவ் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 மேற்படி ஆலயத்தின் பூசகர் இன்று காலை சனிக்கிழமை பூஜை செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தபோது மூலஸ்தான வாசல் கதவுபூட்டு உடைக்கப்பட்டு ஆலயத்திலிருந்து பிள்ளையார் சிலை மற்றும் வெண்கல உபகரணங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

 இத் திருட்டு சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் மோப்பநாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





யாழ். கல்வியங்காடு பகுதியில் ஆலயத்தில் தெய்வ விக்கிரகங்கள், வெண்கல உபகரணங்கள் திருட்டு படங்கள் Reviewed by NEWMANNAR on November 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.