அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் இராணுவத்தை குறைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பெண்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, கணவனை இழந்த குடும்பங்களை பாதுகாக்கும் பெண்களுக்கு தைரியத்தை வழங்குமாறு போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டு தலைவியாக இருக்கும் பெண்ணின் கோரிக்கையும் பிரச்சினைகளும் என்ற தலைப்பில் மட்டக்களப்பில் நடைபெற்ற போரில் துணைவர்களை இழந்த விதவைப் பெண்களின் மாநாட்டில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த விதவைப் பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவயமயம் காரணமாக தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் இருப்பதாக கூறும் இந்த பெண்கள் அச்சத்தை அதிகரிப்பதைவிட பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடபகுதி பெண்களின் நாளாந்த வருமானம் ஒரு ஆண் சம்பாதிக்கும் பணத்தை விட அரை மடங்கு குறைவாகும்.

இந்த நிலைமையை மாற்றியமைக்க பெண்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் இந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போர் காரணமாக காணி உறுதிகள் உட்பட முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க தேவையான நிதி உதவி போன்ற பலவற்றை பெற முடியாத கஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

போர் நடைபெற்ற பிரதேசங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் வரம் இல்லாமல் போயுள்ளது. வறுமை காரணமாக பல பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு வறிய பிள்ளைகளின் கல்விக்காக கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் பெண்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் போரில் காணாமல் போன கணவன் உட்பட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
வடக்கில் இராணுவத்தை குறைத்து பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை Reviewed by NEWMANNAR on November 22, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.