மன்னாரில் மனிதாபிமான பணியாளர்களுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டலை கண்டித்து கண்டனப்பேரணி-photos
மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை அதிகாலை சென்ற இனம் தெரியாத குழுவினர் அவருக்கும்,அவருடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டமையினை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவை,மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கண்டனப்பேரணியினை நடாத்தினர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் குறித்த கண்டனப்பேரணியில் ஈடுபட்டனர்.
இதன் போது குறித்த போரணியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்;னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,வடமாகாண சுகாதார அமைச்சார்வைத்திய கலா நிதி வி.சத்தியலிங்கம், வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சார் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்
சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன், நீர்கொழும்பு காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவர் எஸ்.பிரிட்டோ, அருட்தந்தையினர்,மகளீர் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த கண்டனப்பேரணியானது மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருக்கும்,அவருடைய குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுருத்தல் மற்றும் காணமல் போனவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுருத்தல்கள் ஆகியவற்றை கண்டித்தே குறித்த பேரணி இடம் பெற்றது.
குறித்த கண்டனப்பேரணி மன்னார் செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தை சென்றடைந்தது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சமூகமளித்தார். இந்த நிலையில் குறித்த பேரணியில் வருகை தந்த முக்கியஸ்தர்களுக்கும்,மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ.டி.பி.சுகதபால மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்த விற்கும் இடையில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பணியாற்றுகின்றவர்களுக்கு ‘புலனாய்வுத்துரை’ என்ற பெயரில் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வருகின்ற அச்சுரூத்தல்கள் தொடர்பாக அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன் போது அச்சுருத்தல் விடுக்கப்பட்ட தொலை பேசி இலக்கம் தொடர்பாகவும்,குறித்த நபர் யார் என்பது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுப்பதேடு இனி வரும் காலங்களில் இவ்வாறான பிரச்சினைகள் இடம் பெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பேரணி மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் இடம் பெற்றது.
மன்னாரில் மனிதாபிமான பணியாளர்களுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டலை கண்டித்து கண்டனப்பேரணி-photos
Reviewed by NEWMANNAR
on
November 22, 2013
Rating:

No comments:
Post a Comment