சல்மான் குர்ஷித்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகளுக்குமிடையில் இன்று(2013.11.16) சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
கொழும்பு தாஜ் சமூத்திராவில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பபொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீத் ஆகியோர் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தற்போதைய நாட்டின் சமகால பிரச்சினை மற்றும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் செயற்கையாக மேற்கொள்ளப்படும் தடைகள்.குறித்தும் வெளியுறவுத் துறை அமைச்சரை இப்பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பிற்பாடு அம்மக்கள் எதிர் கொண்ட பிரச்சினைகள் தற்போதைய மீள்குடியேற்றத்தில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் அவர்களது அடிப்படை தேவைப்பாடுகள் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதுக்கு எடுத்துரைத்ததுடன் யுத்த காலத்தில் வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழ் மக்கள் மெனிக் பார்ம் நலன் புரி முகாமில் இருந்து தாம் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த காலத்தில் சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்பட்டது தொடர்பிலும் இவர்களது மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கம் ஆற்றிய பங்களிப்பு தொடர்பிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெளிவுபடுத்தினார்.
அதே வேளை யுத்தத்தால் பாதிப்புக்குள்ளான பிரதேச மக்களுக்கென இந்திய அரசாங்கம் வழங்கிய வீடமைப்பு திட்டத்திற்குள் முஸ்லிம் மக்கள் உள்வாங்கப்பட்டிருந்தமைக்கு தமது நன்றிகளை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன் இருந்த போதும்இஅத்திட்டம் இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான யதார்த்தமான காரணங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான பிரதி நிதிகள் இந்த சந்திப்பின் போதுஇவெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷிதின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதிகார பகிர்வில் முஸ்லிம்களின் வகிப்பகம் தொடர்பிலும் இந்த தீர்வில் முஸ்லிம் மீதான அக்கறை தொடர்பில் இந்தியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் இந்திய அரசாங்கத்தின் எதிர்கால பங்களிப்பு தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட் தெரிவித்தார்.
அதே வேளை 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை உடன்படிக்கை தொடர்பில் முஸ்லிம்களின் கருத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமையின் வெளிப்பாடே முஸ்லிம் கட்சிகளின் உருவாக்கத்திற்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வகையில் அதனது செயற்பாடு அமைந்திருந்தாகவும்இஇங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி நிதிகளால் எடுத்துரைக்கப்பட்டது.
18 கோடி முஸ்லிம்களை கொண்ட இந்தியா இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நகர்வுகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்ட போது அதற்கு பதிலளித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைகள் தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றினை தமக்கு சமர்ப்பிக்குமாறும் இம் மக்களது விடயம் தொடர்பில் எமது கவனம் நிச்சயம் செலுத்தப்படும் என்ற உறுதிப்பாட்டினையும் இங்கு வழங்கினார்.
அதே வேளை தற்போதைய சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மேலும் கூறினார்.
சல்மான் குர்ஷித்துக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பு
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:






No comments:
Post a Comment