அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துயர்துடைப்பு மறு வாழ்வு சங்கத்தினால் நடாத்தப்பெற்ற தாய் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான ஒன்று கூடல் - படங்கள்


வருடா வருடம் நெதர்லாந்தைச் சேர்ந்த கொடை வள்ளல் திரு. மியுஸ் (MUIS) என்பவர் மன்னாருக்கு விஜயம் செய்து தங்களது நிதியினால் உதவி பெறும் 75 சிறார்களின் ஒன்று கூடலில் கலந்த கொள்வார். கடந்த 10-11-2013ல் ம.து.ம.ச ஸ்தாபனம் இச்சிறுவர்களின் ஒன்று கூடலை மன்னார் YMCA மண்டபத்தில் வெகு சிறப்பாக நடாத்தியது.

அன்றைய தினம் கடந்த 13 ஆண்டுகளாக இச்சிறார்களின் கல்விக்கு உதவி செய்யும்      திரு. மியுஸ் அவர்கள் சகல சிறுவர்களுக்கும் கல்வி உபகரணங்கள், புத்தகப்பை, மதிய உணவு போன்றவற்றை வழங்கி சிறப்பித்தார்.

 ம.து.ம.ச் திரு. சின்கிளேயர் பீற்றர் கருத்துத் தெரிவிக்கையில் 1985 ஆனி மாதம் 8ம் திகதி இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு இன்றை வரை சுமார் 12,000 பாடசாலை சிறார்களுக்கு இச்சங்கம் பல்வேறு வகையான கல்வி உதவிகள் வழங்கியதாக கூறியதுடன் அவற்றை பட்டியலிட்டு காண்பித்தார்.

 தாய் தந்தையரை இழந்த 75 சிறார்களுக்கு திரு.  மியுஸ் அசர்களின் நிதியிலுருந்து ஒவ்வொரு தவணையும் சிறார்கள் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டு அவர்களின்     கல்வி பெறுபேறுகளை மதிப்பிட்டு தவணைப்பணம் வழங்குவதாகவும் இதில் 3 மாணவ மாணவிகள் பல்கலை கழகத்துக்கு தகுதி பெற்றதாகவும், 26 மாணவர்கள் க.பொ.த (சா/த) க.பொ.த (உ/த) கல்வி கற்று வருவதாகவும். இவர்களில் ஒரு சிலர் தமது கல்வியை நிறைவு செய்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாகவும் கூறினர்.
 பெயர் குறிப்பிட விரும்பாத திரு. K. என்பவர் போரினாலும் சுனாமியினாலும் பெற்றோரில் ஒருவரை இழந்த 90 சிறார்களுக்கு கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகின்றார்.

 ம.து.ம.ச நிதியிலிருந்து 4 பல்கலை கழக மாணவர்களுக்கு மாதாந்தம் பண உதவி வழங்கப்படுகின்றது. மேலும் ஒவ்வொரு வருடமும் 2-3 வரையான பல்கரைக் கழக மாணவர்கள் இவ் உதவித்திட்டத்துக்கு தெரிந்து கொள்ளப்படுகின்றனர்.

 ஓவ்வொரு தை மாதமும் மன்னார் மாவட்டத்தில் 600 மாணவர்கள் அவர்களின் ஏழ்மை நிரையை கருத்தில் கொண்டு பாடசாலை அதிபர் மூலமாக கல்வி உபகரணங்கள் ம.து.ம.ச நிதியிலிருந்து வழங்கப்படுகின்றது.
   க ;னடாவில் இயங்கி வரும்; கத்தோலிக்க இயக்கம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் 200 சிறார்கள் தெரிவு செய்யப்பட்டு கல்வி உபகரணங்கள் எமது சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.

 (Candle Aid) கன்டில் எய்ட் கொழும்பு ஸ்தாபனம் நன்கு கல்வி கற்கும் பாதிக்கப்பட்ட 3 மாணவர்களை தெரிந்தெடுத்து பல்கலைகழகத்துக்கு ம.து.ம.ச மூலமாக மாதாந்தம் உதவி வழங்கப்பட்டு வருவதுடன் இலுப்பைக்கடவை பாடசாலையில் கல்வி கற்கும் போரினால் ஒரு காலை இழந்த சிறுமிக்கு மாதாந்தம் நிதி உதவி வழங்கி வருகின்றது.

மேற்படி ம.து.ம.ச கல்வி திட்டத்துக்கு உதவிகள் வழங்கவிரும்பும் நலன் விரும்பிகள்      தலைவர்  ம.து.ம.ச காரியாலையம் 17 வயல் வீதி மன்னார். காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல் 
திரு. சின்கிளேயர் பீற்றர்
ம.து.ம.ச உறுப்பினர்










மன்னார் துயர்துடைப்பு மறு வாழ்வு சங்கத்தினால் நடாத்தப்பெற்ற தாய் தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான ஒன்று கூடல் - படங்கள் Reviewed by NEWMANNAR on November 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.