இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது
இது குறித்து சென்னை துறைமுகம் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இந்திய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினர் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இந்திய கடல் பகுதிக்குள் வந்து இலங்கைப் படகு மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த படகை பறிமுதல் செய்து, அந்தப் படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை, சென்னை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகும் ஒப்படைக்கப்பட்டது.
துறைமுக பொலிஸார் 6 இலங்கை மீனவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் ஆறு பேர் கைது
Reviewed by Author
on
November 29, 2013
Rating:

No comments:
Post a Comment