ஆஸி., நியூஸிலாந்து எம்.பி.களுடன் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது வடக்கு, கிழக்கில் உள்ள நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் லீ ரைனோன் மற்றும் நியூஸிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் யான் லொக்கிக்கும்; வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாணசபை அமைச்சர்களுக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வவுனியா தம்பா ஹோட்டலிலிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீண்டகாலமாக தீர்வு காணப்படாத அரசியல் தீர்வு சம்பந்தமாக தாம் தமது தரப்பு நியாயப்பாடுகளை எடுத்துக் கூறியதுடன், 2009ஆம் ஆண்டும் அதற்கு முன்னரும் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகளையும் தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, இரு பகுதியினருக்கும் இடையில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் சந்திப்பாக இது இடம்பெற்றதாகவும் தொடர்ந்தும் இரு தரப்பினருக்கிடையிலும் கருத்துக்ளை தொடர்ந்தும் பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் நாம் முடிவு எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்தப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், எம்.சரவணபவன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, ஆர்.இந்திரராஜா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆஸி., நியூஸிலாந்து எம்.பி.களுடன் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு
Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:

No comments:
Post a Comment