மன்னார் கள்ளியடி அ.த.க பாடசாலையில் எதிர் வரும் 12ம் திகதி சிரமதானம்
மன்னார் கள்ளியடி அ.த.க பாடசாலை வளாகத்தில் குவிந்து கிடக்கும் கற் குவியல்களின் இடையே பாம்புகள் நடமாட்ட ம் அதிகமாக காணப்படுவதால் மாணவர்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே எதிர் வரும் 12ம் திகதி புதன் கிழமை காலை 9.30-10.30 வரை அல்லது பகல் 2.30-3.30 வரைக்கும் சிரமதான பணிகளை பெற்றோர் மேற்கொண்டு ஒத்துழைப்பினை தர வேண்டும் எனவும் மற்றும் சிரமதானத்தில் பங்கேற்போர் மண்வெட்டி அலவாங்கு மற்றும் உரிய உபகரணங்களை கொண்டுவரல் சிறந்தது எனவும் பாடசாலை அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னார் கள்ளியடி அ.த.க பாடசாலையில் எதிர் வரும் 12ம் திகதி சிரமதானம்
Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:

No comments:
Post a Comment