கிழக்கு மாகாண அபிவிருத்திக்குமுதலீடுகளையும் வழங்குவதாக சுவிஸிலாந்து, ஈரான், மாலைதீவு நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவியாளர்களின் பங்களிப்புகளையும் வழங்குவதாக சுவிஸிலாந்து, ஈரான், மாலைதீவு நாடுகளின் தூதுவர்கள் கிழக்கு மாகாண அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவருமான அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிடம் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி , அபவிருத்தி கிராமிய கைத்தொழில், அபிவிருத்தி , மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று முன்தினம் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து கிழக்கு மாகாண அபிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், திட்டப்பணிப்பாளர் டாக்டர் ஞானசேகரன், மற்றும் அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சமந்த அபேவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கையிலுள்ள சுவிஸ் நாட்டின் தூதுவர் தோமஸ் ஸிச்சரை சந்தித்த அமைச்சர் ஹாபிஸ் நஸீர் , சுவிற்சலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்குமாறும், கிழக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தியை அதிகரிக்க உதவுவதோடு தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக தூதுவர் கூறுகையில் : சுவிற்சலாந்திலுள்ள புலம்பெயர்ந்த இலங்கையர்களோடு பேச்சுவார்த்தை நடாத்தி கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்ள தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தொழில்நுட்பவியலாளர்களின் சேவைகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரிடம் உறுதியளித்தார்.
ஈரான், இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கலாநிதி முஹமட் றாபி ஹஸானியூர் அல் முஸ்தபாவை சந்தித்த கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பாக ஈரானின் உதவியைப் பெறுவது தொடர்பாக கலந்துரையாடினார். விவசாயம், கால்நடை வளர்ப்பில் நவீன தொழில் நுட்ப முறையில் ஈரான் அபிவிருத்தி கண்டுள்ளது. விரைவில் அமைச்சின் தூதுக்குழுவினை ஈரானுக்கு அழைத்துச் சென்று இது தொடர்பாக இது தொடர்பான முன்னேற்றங்களை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாணத்தில் கால்நடை, விவசாய அபிவிருத்திக்கு போதிய உத்திகளை செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரானிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர்களை விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். அத்துடன் மாலைதீவின் இலங்கைக்கான தூதுவர் ஹுசைன் சிஹாப் அவர்களுடனான சந்திப்பும் தாருஸலாமில் இடம்பெற்றது.
இதன் போது கலந்துரையாடும்போது இலங்கையர்கள் மாலைதீவில் முதலீடுகளை மேற்கொள்வதாகவும் அதை போல் மாலைதீவின் முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வர உதவுவதாகவும் கிழக்கு மாகாணத்தின் கைத்தொழி;ல் அபிவிருத்திக்கு உதவுவதாகவும் தூதுவர் அமைச்சரிடம் உறுதியளித்தார்.
தகவல் : எம்.எச்.எம். நழீர்

Reviewed by NEWMANNAR
on
November 08, 2013
Rating:

No comments:
Post a Comment