வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரி ஆரம்பம்
கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் கொட்டாவையிலிருந்து கடுவெல வரையான பகுதி எதிர்வரும் ஜனவரி மாதம் திறந்துவைக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் துறைமுகங்கள் செயற்றிட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்த வீதியின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் கடுவெல, கடவத்த கெரவலப்பிட்டிய இரண்டாம் கட்டம் 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் திறக்கப்படவுள்ளது.
இதனைத் தவிர வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக வீதியின் காலியிலிருந்து மாத்தறை வரையான பகுதியும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரி ஆரம்பம்
Reviewed by NEWMANNAR
on
November 24, 2013
Rating:

No comments:
Post a Comment