அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் உள்ள ஊனமுற்றவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் -பாடங்கள்

எமது சிறிய இலங்கை நாட்டில் புள்ளி விபர கணக்கின் படி 21 மில்லியன் சனத்தொகை கொண்டதாகவும்அதில் சுனாமியின் பின்னும்  25 வருட போரின் பின்னும் 8 வீதமானவர்கள் ஊனமுற்றவர்களாகவும்  மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவும்இ  இவற்றில் 3 வீதமானவர்கள் தங்களது அவயவங்களை இழந்து பாதிக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது.


அவயவங்களை இழந்தவர்களில் 85   வீதமானோர் செயற்கை அவயவங்களான பொய்க்கால், பொய்க்கை , பொய்ப்பாதம் , மேலும் போலியோ சப்பாத்துக்கள் ஏனைய சார்பு உறுப்புக்கள் போன்றவற்றை தமது வாழ் நாள் முழுதும் பாவிக்கவேண்டியுள்ளது.

மன்னாரில் இயங்கும் மெத்தா செயற்கை அவயவங்கள் பொருத்தும் நிறுவனம் சுமார் 890 நபர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தி உள்ளது. ஏனைய நிறுவனங்களான  வாழ்வுதயம் யாழ் ஜெயபுர் நிலையம வென்புறா றணவிரு செவண இந்திய நிறுவனம்;, Friend in need Society, 
  ஏனைய தனியார் நிறுவனங்கள் போன்றன சுமார் 20,000 பேருக்கு மேல் செயற்கை அவயவங்கள் பொருத்தியுள்ளன.


செயற்கை அவயவங்களை இழந்தோர் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்களை பற்றி இக் கட்டுரையில் ஆராயப்பட்டள்ளது.  இவற்றை இவர்கள் கடைபிடிப்பார்களாயின் தமது தேக ஆரோக்கியத்தை இறப்புவரை நன்கு பேண முடியும்.

திரு. சின்கிலேயர் பீற்றர்
மெத்தா தொடர்பு அதிகாரி,
மெத்தா செயற்கை அவய நிறுவனம்
பொது வைத்தியசாலை. மன்னார்,
தொ. பே.  077-2131-652
மின் அஞ்சல்


செயற்கை அவயவங்களை பாவிப்பவர்களின் கவனத்திற்கு 

 (பயனாளிகளின் கவனத்திற்கு 

 01. நீங்கள் சிகிச்சை நிலையத்திற்கு வரும்போது உங்களுக்கு கால் கை அவயவங்கள் பொருத்தியிருந்தால் அவற்றையும் ஒரு சோடி சப்பாத்து/சென்டில்/சிலிப்பர் கொண்டு வருவதுடன் வழங்கப்பட்ட வைத்தியரின் கடிதங்களையும் கொண்டுவரவும். சிறிய பழுது பார்த்தல் வேலை இருப்பின் குறுகிய நேரத்தில் செய்து தரப்படும். பெரிய பழுது பார்த்தல் இருப்பின் நீங்கள் உங்கள் அவயவங்களை ஒரு சில நாட்கள் நிலையத்தில் விட்டு செல்ல வேண்டி வரும். 

02. புதிய செயற்கை அவயங்கள் பொருத்துபவர்களுக்கு அளவுகள் எடுக்கப்படுவதுடன் பொருட்கள் எம்மிடம் இருப்பின் பாதங்கள பொய் அவயங்கள் பட்டிகள் உறைகள் நிறம் போன்றவற்றை நீங்கள் தெரிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும். 

03. அவயங்கள் வழங்கியபின் நடைபயிற்சி அப்பியாசங்கள் ஆலோசனைகள் எம்மால் வழங்கப்படும். வீடு சென்றபின் உங்கள் அப்பியாசங்களில் நடக்கம்போது அல்லது அடுத்த உண்மை அவயவங்களில் பிரச்சனைகள் தென்பட்டால் ஒருவாரத்திற்குள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். 

04. அவசரதேவை இல்லாவிட்டால் சிகிச்சை அளிக்கும் நேரம் வௌ;வேறு நபர்களுக்கு வேறு பட்டதாக இருக்கும். எனவே உங்கள் அவசர வேலைகள் இருப்பின் அது சம்பந்தமாக நிலைய அதிகாரியிடம் கதைத்து முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம். 

 பயனாளிகளுக்கான அப்பியாசப் பயிற்சிகள் 

 01. உங்களது வைத்தியர்/ மருத்துவர் ஏற்கனவே உங்களுக்கு சில அப்பியாசப்பயிற்சிகளை கூறியிருப்பார் அவற்றை செய்யவும். இருப்பினும் அவயவங்கள் துண்டிக்கப்பட்டோஉங்கள் தசை நார்களை கடினமாக்குவதற்கும்அதன் பலத்தை கூட்டுவதற்கும் துண்டிக்கப்படாத ஏனைய உறுப்புக்களை பாதுகாப்பதற்கும் உங்கள் முழு உடலுறுப்புகளும் சுயமாக இயங்குவதற்கு கீழ் கண்ட பயிற்சிகள் அவசியம்.

 02. இப்பயிற்சிகள் உடனடியாக தங்களால் செயற்படுத்துவதுடன செயற்கை அவயங்கள் பாவனையுடன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். 

பயிற்சி-01 

• கடின தரையில் அமர்ந்தவாறு உங்கள் இரு கால்களையும் முன்னோக்கி நீட்டவும். • தொடையின் தசைப்பகுதியை கடின தரையில் கீழ் நோக்கி காலால் நண்கு அழுத்தவும். • இப்பயிற்சியை 1-10 எண்ணியபின் தளர்த்து மீண்டும் செய்யவும். • முதலில் உண்மைக்காலுக்கும் பின்பு பொய் காலுக்கும் அடுத்து இரு கால்களுக்கும் இப்பயிற்சியை வழங்கவும். 

 பயிற்சி-02

 • உங்கள் உண்மைக்காலை தரையிலி நீட்டி இருக்கத்தக்கதாகவும் துண்டிக்கப்பட்ட அவயம் மேல்நோக்கி இருக்கத்தக்கதாக சரிந்து பக்கவாட்டில் படுக்கவும். • துண்டிக்கப்பட்ட அவயவத்தை மெதுவாக முன் பக்கமாகவும் பின் பக்கமாகவும் நன்கு அசையுங்கள். பின்நோக்கி அசைக்கும்போது உங்களால் முடியும் வரை பின்நோக்கி அசைக்கவும். • உங்களால் முடியுமாயின் அடுத்தபக்கம் சரிந்து துண்டிக்கப்பட்ட அவயம் தரையில் படத்தக்கதாக உண்மைக்காலுக்கு இப்பயிற்சியை வழங்கவும். • இதன் மூலம் உங்கள் இடுப்புப்பகுதிக்கு பயிற்சி வழங்கி பலத்தை கொடுக்கின்றீர்கள். 

பயிற்சி-03

 • தரையில் படுத்து உங்கள் உண்மைக்காலையும் துண்டிக்கப்பட்ட அவயவத்தையும் நீட்டி ஓர் தலையனை மேல் அல்லது சிறிய உயரமான ஷ;ருள்ஜளவழழடஸமேல் வைக்கவம். • தோள் மூட்டுப்பகுதியையும் கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை சற்று உயர்த்தி 1-10 எண்ணி மீண்டும் கீழ்நோக்கி கொண்டு வரவும். • இப்பயிற்சியின் மூலம் கால் தசைகளுக்கும் இடுப்புக்கும் தோள்மூட்டுப்பகுதிக்கும் பயிற்சி கொடுக்காப்படுகின்றது. 

பயிறசி-04

 • தற்போது உங்களது ஒரு பகுதி அகற்றப்பட்டதனால் மறு உறுப்புக்கு அதிக வேலை கொடுக்கின்றீர்கள். இதனால் கதிரையில் இருக்கும் போது வீட்டிற்குள் செயற்கை அவயம் இன்றி நடமாடும் போதும் துண்டித்த பகுதி ஏனைய கடின பொருட்களில் அடிபட்டு காயங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். • உங்கள் பாதங்களின் குதியை வட்டமாக சுற்றவும். பின்பு மறு பக்கம் சுற்றவும். இதே போன்று விரல்களை மேலும் கீழும் அசைக்கவும். இப்பயிற்சியின் முலம் உண்மைக்காலுக்கும் துண்டிக்கப்பட்ட பகுதி இரத்த நாளங்களுக்கும் இரத்த ஓட்டம் சீராக்கப்படுகின்றது. இதே போன்று 2-10 வரை செய்யவும். • மேற் கூறிய பயிற்சி தொடர்ச்சியாக இருக்கையில் இருப்பவர்களுக்கு அவசியம். ஓவ்வொரு பயிற்சியும் 6 தடவை செய்வதுடன் அவயத்துக்கு நோவு ஏற்படும் போது பயிற்சியை நிறுத்தவும. • 

 செயற்கை அவயவங்கள் பொருத்துபவர்கள் தமது துண்டிக்கப்பட்ட அவயவங்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கவனித்தல் அவசியம். • துண்டிக்கப்பட்ட பகுதியில் காயங்கள்தழும்புள் சிறாய்வுகள் இரத்த கண்டிப்புகொப்புளங்கள் உள்ளதா என அடிக்கடி பரிசோதிப்பதிலும் அப்படி இருப்பின் செயற்கை அவயவங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தியரின் ஆலோசனை பெறவும். • துண்டிக்கப்பட்ட அவயம் செயற்கை உறுப்புடன் உறாய்வதினாலும் காற்றோட்டம் இல்லாத படியினால் வியர்வையினாலும் பாதிப்பு ஏற்பட இடமுண்டு. மேலும் தொடக்கத்தில் துண்டிக்கப்பட்ட அவயத்தின் தோல் பகுதி உணர்ச்சி கொண்டதாக இருப்பதினால் செயற்கை அவயவங்கள் பாவிக்கும் முன் கிழ்க்கண்டவற்றை கவனிக்கவும்.

 01. ஒவ்வொரு நாள் பிற்பகலிலும் துண்டித்த பகுதியை இளம் சூடான நீரினாலும் மென்மையான சவர்காரத்தினாலும் நன்கு கழுவவும். 

02. கழுவிய பின் நன்கு உலரவிட்டு செயற்கை அவயத்தை பாவிக்கவும். 

03. சுத்தமான மேஷ; ஜஉறைஸ பாவிப்பதுடன் ஒவ்வொரு நாளும் அதை கழுவி உலர விட்டு அணியவும். 

04. வைத்தியரின் அனுமதியின்றி துண்டத்திற்கு பவுடர் க்ரீம் பாவிப்பதை தவிர்க்கவும். ஏனனில் அவை துண்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். 

05. ஒவ்வொரு தடவையும் செயற்கை அவயவங்களை கழற்றிய பின் உங்கள் துண்டத்தில் காயங்கள் கொப்புளங்கள் உறாய்வுகள் உள்ளதா என முகம் பார்க்கும் கண்ன்டியின் மூலம் அவதானிக்கவும். அப்படி இருப்பின் வைத்தியரின் ஆலோசனை பெறவும். 

06. நீரழிவு நோய் ஒவ்வாமை இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துண்டத்தில் காயங்கள் ஏற்படும் போது வைத்தியரின் ஆலோசனை பெறவும். • உங்கள் அவயவங்கள் துண்டிக்கப்பட்ட பின் மீதமுள்ள அவயவங்கள் உங்களுக்கு பெறுமதி மிக்க சொத்தாகும். 

எனவே இவற்றை நன்கு பாதுகாத்து காயங்கள்இ நோங்களில் இருந்து இவற்றையும் இழக்காது பாதுகாத்தல் அவசியமாகும். • பாதங்களில் வீக்கம் காணப்படின் காலை உயரமான பொருளின் மேல் உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும்.

 தொடர்ந்து கதிரையில் இருக்கும் போது கதிரையின் விழிம்புகள் தொடையின் இரத்த நாளங்களை அழுத்தாமல் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். ஏனெனில் இவை பாதங்களுக்கு விறைப்பு தன்மையை கொடுக்கும். • கட்டிலில் படுக்கும் போது இரு கால்களையும் குறுக்காக வைத்திருப்பதை தவிர்க்கவும் குதிக்கால்கள் தொடர்ந்து படுத்திருக்கும் போது கட்டிலில் அழுத்துவதனாலும் குப்புறப்படுக்கும் போதும் கால் விரல்கள் கட்டிலில் அழுத்தாமல் இருப்பதற்காக இடதுஇவலது பக்கம் சாய்ந்து படுக்கவும். 

கட்டிலில் இருந்து எழும்பும் போதும் இறங்கும் போதும் குதிக்காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். • படுத்திருக்கும் போது உங்கள் துண்டிக்கப்பட்ட அவயம் அடுத்த காலின் கீழ் தலையனையை வைக்காதீர்கள். ஏனெனில் இவை முழங்கால் இடுப்பு பகுதியை விறைப்பாக்கும். • காலுறைகள் அணியும் போது இறுக்கமான உறைகனையும் காலுறையில் நடயளவiஉ இருப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இவை இரத்த ஓட்டத்தை தடை செய்யும். •

 பாதங்கள் துண்டிக்கப்பட்ட பகுதி காய்ந்து வறண்டு இருந்தால் பேபி க்ரீம் பாவிப்பது நல்லது. • பாதணிகளையும் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் போடும் உறைகளையும் ஜெலி உறைகளையும்அடிக்கடி நன்கு கழுவி காயவிடவும்.

 புதிய செயற்கை உறுப்புக்கள் பொருத்துபவர்களின் கவனத்திற்கு

புதிய செயற்கை உறுப்புக்கள் பொருத்த வரும்போது சில சமயம் 2-3 நாட்கள் நடைபயிற்சி வழற்குவதற்காக வைத்திய சாலையில் தங்க வேண்டி வரும். எனவே தங்கவதற்குறிய ஆயத்தங்களுடன் வரவும். • பெண்கள் தாய்மார் சிறுவர்கள் வயது போனவர்கள் இன்னும் ஒருவரின் உதவியுடன் வருவது நல்லது. • செயற்கை அவயம் பொருத்தப்பட்டு பின்பு கழற்றி மீண்டும் பொருத்துவதற்கு பழகிக்கொள்ளவும். 

பின்பு எழுந்து நின்று ஒன்று அல்லது இரண்டு அடி தூரம் நடந்து பார்க்கவும். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்ட பின் இரு சமாந்திர கைபிடி சட்டத்தில் நடந்து பழகவும். • இதில் நம்பிக்கை ஏற்பட்டபின் 1-2 கைத்தடியின் உதவியுடன் நடந்து பழகவும். இரு கால்களையும் இழந்தவர்களுக்கு வோக்கர் இன் உதவி தேவைப்படும். • இதில் நம்பிக்கையும் திடமும் பயமும் இல்லாதிருப்பின் உங்களக்கு படிகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாய்வ தளத்தில் மெதுவாக ஏறுவதற்கும் இறங்குவதற்கும் மேலும் வேறு கடின தரைகளில் நடமாடுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும்.

 • செயற்கை அவயவங்களை முளங்கால் பகுதிகளில் மடிப்பதற்கும்  பாவிக்கும் முறையும் சொல்லித்தரப்படும். • மேற் கூறியவற்றில் உங்களின் நம்பிக்கை அதிகரித்த பின் நீங்கள் சுயமாக 1-2 கைத்தடிகளுடன் சுகமாக நடப்பதற்கும் ஒரு வித ஆதாரங்களும் இன்றி சுயமாக நடப்பதற்கு கற்றுத்தரப்படும். 

• மேற்படி நடை பயிற்சிகள் ஒரு சிலருக்கு கிழமைகள் மாதங்கள் எடுக்கக்கூடும். உளவியல் ரீதியாக சில தாக்கங்கள் ஏற்படின் உங்கள் பகுதி மருத்துவரை அனுகவும். • நீங்கள் சுயமாக நடமாடுவது உங்கள் முயற்சியில் தங்கியுள்ளது. 

 பாதிக்கப்பட்ட அவயவங்களை வைத்திருக்கும் முறை 

• உங்கள் செயற்கை அவயவங்களின் இயக்கம் நடமாட்டத்திற்கு விசேட கருவிகள் பாவிக்கப்படல் வேண்டும். எனவே இவை சிலசமயம் இருக்காதிருத்தல் நீங்கள் அவற்றை சரிசெய்யாது உறுப்புகளை உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டு வரவும். ஏனெனில் பிழையான கருவிகளின் பாவனை செயற்கை அவயவங்களின் பாவனைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

 • ஓவ்வொரு நாள் பாவனைக்குப் பின்பும் ஈரமான துணியினால் செயற்கை அவயவற்களின் உற்புறமும் வெளிப்புறமும் துப்பரவு செய்வதுடன் நன்கு உலர விடவும். சுகாதாரமான செயற்கை உறுப்புக்கள் நோயற்ற நீண்ட பாவனையை தரும்.

 • உங்கள் செயற்கை பாதம் ஈரமற்றதாக நன்கு உலர்ந்திருத்தல் அவசியம். அல்லது குதி பாத இயக்கத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். செயற்கை அவயங்களின் இயக்க ழூட்டுகளுக்கு எண்ணெய் பாவிப்பதை தவிர்க்கவும் ஏனெனில் இவை தேய்மானத்தை அதிகரிக்கும். 

. • மேற்படி வேலைகள் தொழிற்சாலையில் செய்ய வேண்டி வரும் போது சில சமயம் உங்கள் அவயவங்களை கையளித்து வர வேண்டி வரும். எனவே அதற்கான ஆயத்தங்களுடன் வரவும். • உங்கள் மருத்துவர் உங்களுக்கான பாதணியை சிபாரிசு செய்யும் போது அல்லது வழங்கும் போது இரு சப்பாத்துக்களின் உயரங்களும் சம நிலையில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும். துண்டிக்கப்பட்ட அவயத்தில் காலுறை கையுறைஅணிவதன் அவசியம். 

 • இவ் உறைகள் துண்டிக்கப்பட்ட சருமத்திற்கு பாதுகாப்பும் செயற்கை அவயவங்கள் அணியும் போது கால் கை தோலில் சிராய்வுகள் வராமல் இருப்பதற்கும் வியர்வையை உறின்சி எடுப்பதற்கும் காற்றோட்டம்; வழங்குவதற்கும் அவயவத்திற்கு இதமாகவும் இருக்கும். • செயற்கை அவயவங்கள் அணியும்போது காலுறை கையுறை அணிவது வழமையான சம்பிரதாயம் ஆகும். தொடர்ந்த ஒரு உறை அணியும் போது சில சமயம் உங்கள் உடல் மெலிந்து சுருக்கம் ஏற்பட்டால் செயற்கை அவயவத்தின் பிடிமானத்திற்காக 1-3 உறைகளை வைத்தியரின் ஆலோசனையின் பெயரில் பாவிக்கவும். 

• நீங்கள் அணியும் உறைகளின் அளவுகள் கால்கள் அளவெடக்கும் போது வைத்தியரினால் அளவெடுக்கப்படும். இவ்வுறைகளை நாளாந்தம் கழுவி உலர வைத்து அணியவும். உங்களிடம் பழைய பாவித்த உறைகள் பாவிப்பில் இருப்பின் அவற்றையும் அவதானமக கழுவி பாவிக்கவும். • உங்கள் உறைகள் கிழிந்து தொய்வு எற்பட்டால் தையல் முடிச்சுகள் கானப்பட்டால் ஏனெனில் அவை தோளில் தழும்புகளை ஏற்படுத்தும். • ழூன்று உறைகளுக்கு மேல் அணிவதாயின் உங்கள் வைத்தியரை சந்தித்து புதிய பாதத்திற்குஅளவு கொடுத்தல் வேண்டும்.

 ஊனமுற்றோர் தமது நாளாந்த கடமையின்போது கவனிக்க வேண்டியது

 • வழமையாக ஊனமுற்றவர்களுக்கு சேவை புரிவதற்கு தொழில் சார் உத்தியோகத்தர் ஒருவர் கடமையாற்றுவார்.  இவர் உங்களின் காரியாலயம் வீட்டில் நீங்கள் நடமாடுவதற்கு உரிய ஆலோசனையை வழங்குவார். • உங்களின் பாதிப்பு உடல் இயக்கத்தன்மை பொறுத்து சில சமயம் சக்கர நாற்காளிகள் வழங்கப்படும். இவற்றின் பாவனை சம்மந்தமாக நீங்கள் பின் நோக்கி நகர்த்தவுமசாய்வு தளத்தில்படிகளில் ஏறவும் இறங்கவும் சக்கரங்கள் இயங்காமல் தடுப்பதற்கும்வாகனற்களில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் கதிரையிலிருந்து கடடிலுக்கு மாறுவதற்கும் கற்றுத்தரப்படும். • நீங்கள் உங்கள் வீட்டு நிலவரத்தையும் வீட்டில் உள்ளவர்களின் உதவி புரியும் தன்மையையும் தொழில் சார் சிகிச்சை உத்தியோகத்தருக்கு கூறினால் அவர் மேலதிக ஆலோசனைகளையும் வழங்குவார். • சில சமயம் உங்களுக்கு ஆடை அணிவதற்கும் உணவு உண்பதற்கும் குளிப்பதற்கும் மலசலம் கழிப்பதற்கும் சமைப்பதற்கும் பிள்ளைகளை கவனிப்பதற்கும் உங்கள் தொழிலில் ஈடுபடுவதற்கும் கடினமாக இருப்பின் ...... 

01 உங்களுக்கு தேவையான பொருட்களை கையிற்கு எட்டிய தூரத்தில் வைத்திருத்தல் 
 02 உங்கள் செயற்கை அவயவத்திற்கு ஏற்றதாக உடைகள் தைக்கப்பட்டு அணியப்படுதல் காற்சட்டைகள் செயற்கை அவயத்திற்கு ஏற்றதாக சற்று பெரிதாக இருத்தல் வேண்டும்.கைகள் இல்லாதவர்கள் ஏனையவரின் உதவியுடன் உடைகள் அணிதல் வேண்டும்.
 03 ஆடைகள் துவைக்கும் போது வசதியாக அமர்ந்திருந்து துவைத்தல் இவை உங்கள் களைப்பை குறைக்கும். 
04 குளிக்கும் போதும் ஆடைகள் கழற்றும் போதும் ஒரு ஷ்ருலில் இருந்து குளித்தல் தேவையான பொருட்கள் ஜசுடு நீர் துவாய் சோப் ஆடைகள்ஸ அருகில் இருத்தல் நலம். 
06 மலசல கூடத்தில் மேலதிக கைபிடி இருத்தல் விசேட மலசல கூட கதிரை பாவித்தல் நலம். 
 07 நடமாடும் தரை பளிங்கு தரையாய் இருப்பின் அவதானம் தேவை. உங்கள் கால் பாதம் நடமாடும் போது கால் துடைப்பான்களில் தொலை பேசி வயர்களில் கிழிந்த தரை விரிப்பான்களில் இடராத படி பாதுகாத்துக்கொள்ளல் வேண்டும். 

08 மேலதிக தளபாடற்கள் வீட்டில் காரியாலயத்தில் உங்களுக்கு இடராக இருக்கக்கூடும் எனவே தேவையற்றதை தவிர்க்கவும். நீங்கள் இருப்பதற்காக இருபக்கம் கைபிடி உள்ள அகன்ற கதிரை உங்களுக்கு பாதுகாப்பை தரும்.

 09 கட்டில்கள் பலமானதாகவும் கட்டிலில் இருந்து காலை ஊன்றி எழும்புவதற்கும்வேறு இருக்கைகளுக்கு மாறுவதற்கும் உகந்த உயரத்தை கொண்டதாக இருத்தல். 

10 நடமாட சிரமப்படுபவர்களுக்கு கட்டிலின் அருகில் மலசலம் கழிப்பதற்குறிய உபகரணம் இருப்பது நலம். 

11 கட்டிலில் இருந்து வேலை செய்பவர்களுக்கு வாசிப்பவர்களுக்கு கட்டிலின் அருகில் மின்சார வெளிச்சம்'விளக்கு இருத்தல் அவசியம். 

12 நீங்கள் சமயலறையில் சமயல் செய்பவராயின் தேவையான பாத்திரங்கள் அடுப்பு'சமயட் பொருட்கள் போன்றவற்றை கைக்கு எட்டிய தூரத்தில் வைக்கவும். 





இலங்கையில் உள்ள ஊனமுற்றவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் -பாடங்கள் Reviewed by NEWMANNAR on November 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.