அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை சுகாதார மேம்பாட்டு முகாமும் கண்காட்சியும் - படங்கள் -

வவுனியா சுகாதாரத் திணைக்களமும் கல்வி திணைக்களமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த பாடசாலை மட்ட சுகாதார கண்காட்சியும் சுகாதார மேம்பாட்டு முகாமும் நேற்று (07) வவுனியா தவசியாகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பத்து பாடசாலைகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.  

இக் கண்காட்சியில் வவுனியா வடக்கு வலையத்திற்குட்பட்ட பத்து பாடசாலை மாணவர் குழுக்கள் கலந்துகொண்டு தத்தமது ஆக்கங்களை விளக்கங்களுடன் வெளிப்படுத்தினர்.

 தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளுடன் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா எம்.மகேந்திரன், மாகாண கல்விப் பணிப்பாளர், வ.செல்வராசா, கேட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.கே.சகாயராஜா உட்பட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியர்கள். தாதியர், பெற்றோர்கள், மாணவர்கள் போன்ற நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்



பாடசாலை சுகாதார மேம்பாட்டு முகாமும் கண்காட்சியும் - படங்கள் - Reviewed by NEWMANNAR on November 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.