பிரிட்டன் பிரஜை கொலை; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
.jpg) பிரித்தானிய சுற்றுலாப் பயணி குராம் சைக் என்பவரை தங்காலை ஹோட்டலில் கொலை செய்ததாகவும் அவரது தோழியான விக்டோரியா அலெக்ஸா றொவ்னாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தங்காலை பிரதேச சபை தலைவர் சம்பத் விதான பத்திரானகே மற்றும் மேலும் 5பேர் மீது குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்றில் எடுக்கப்பட்டது.
பிரித்தானிய சுற்றுலாப் பயணி குராம் சைக் என்பவரை தங்காலை ஹோட்டலில் கொலை செய்ததாகவும் அவரது தோழியான விக்டோரியா அலெக்ஸா றொவ்னாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தங்காலை பிரதேச சபை தலைவர் சம்பத் விதான பத்திரானகே மற்றும் மேலும் 5பேர் மீது குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்றில் எடுக்கப்பட்டது.சந்தேக நபர்கள் யாவரும் தாம் குற்றமற்றவர்கள் என நீதிமன்றில் கூறினர். தங்காலை நீதவான் யூரேக்கா டி சில்வா முன்னிலையில் நடந்த அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்கள் 13 சாட்சியங்களால் அடையாளம் காணப்பட்டனர்.
ஆயினும் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்பட்ட விக்டோரியா எந்தவொரு சந்தேக நபரையும் அடையாளம் காண தவறிவிட்டார். பிணையில் விடுதலையாகி இருக்கும் சந்தேக நபர்கள் சாட்சியங்களை மிரட்டக் கூடாதென கடுமையாக எச்சரித்த நீதவான் விசாரணை டிசெம்பர் 2ஆம் திகதி நடைபெறுமென அறிவித்தார்.
பிரிட்டன் பிரஜை கொலை; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
.jpg) Reviewed by Author
        on 
        
November 23, 2013
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 23, 2013
 
        Rating: 
      .jpg) Reviewed by Author
        on 
        
November 23, 2013
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
November 23, 2013
 
        Rating: 
 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment