அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர் பாலியல் குற்றத்தில் சிக்கிய பிக்கு விளக்கமறியலில்

வவுனியா எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழங்கில் சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது. 

எட்டம்பகஸ்கட செத்செவன என்ற சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரால் செய்யப்பட்ட ஒரு முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை நடத்தி வந்த பொலிசார், செவ்வாய்க்கிழமை சந்தேகநபராகிய கல்யாண திஸ்ஸ தேரர் என்ற மதகுருவைக் கைது செய்திருந்தனர். 

இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பொலிசார், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவித்து, இவரை இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். 

இந்த வழக்கு தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்த வவுனியா மாவட்ட நீதவான் வி. இராமகமலன், சந்தேக நபராகிய மதகுருவை வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்து, எட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தில் இருந்த 6 சிறுவர்களை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர். ஏற்கனவே, இவர்களில் இருவர் தொடர்பாக பொலிசாருக்கு முறையிடப்பட்டிருந்தது, அத்துடன் பொலிசாரின் விசாணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்ட மேலும் 4 சிறுவர்களும் இவர்களில் அடங்குவார்கள். 

சிறுவர் பாலியல் குற்றத்தில் சிக்கிய பிக்கு விளக்கமறியலில் Reviewed by Author on November 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.