சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்; வீட்டு வாசலில் மாட்டின் மண்டையோடும் வைப்பு
அதே சமயம் அவருடைய ஏழாலை வீட்டிற்கு முன்பாக மாட்டின் தலையும் வைக்கப்பட்டுள்ளது என்று சுன்னாகம், மற்றும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பருத்தித்துறைப் பகுதியில் வசிக்கும் வலி. வடக்கைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுடன் சோ.சுகிர்தன் மீள்குடியேற்றம் சம்பந்தமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) கலந்துரையாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் கொலை அச்சுறுத்தலும் வீட்டு வாசலில் மாட்டின் மண்டை ஒடும் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சோ. சுகிர்தனால் சுன்னாகம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு யாழ். மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா பிரகாஷ் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சுகிர்தனுக்கு கொலை அச்சுறுத்தல்; வீட்டு வாசலில் மாட்டின் மண்டையோடும் வைப்பு
Reviewed by Author
on
November 11, 2013
Rating:
No comments:
Post a Comment