மன்னாரில் கவிதை நூல் வெளியீட்டு விழா -படங்கள்
ஜே . ஆர் . மயூரனின் ' மனப்பூக்கள் ' என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று ( ஞாயிறு ) காலை 10:30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது .
நிகழ்விவு மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு . தமிழ்நேசன் அடிகளார் தலைமையில் இடம் பெற்றது .
இதன் போது குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண அமைச்சர் பா . டெனிஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் . வினோ நோகராதலிங்கம் ,மன்னார் நகர முதல்வர் எஸ் . ஞானப்பிரகாசம் இ மன்னார் நகர பிரதி முதல்வர் ஜேம்ஸ் ஜேசுதாசன் ஆகியோரும் .
கௌரவ விருந்தினர்களாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.எ.ஜே. துரம் ,மன்னார் நகர சபை செயாலாளர் எக்ஸ் . எல் . ரெனால்ட் , சித்த மருத்துவ நிபுணர் வைத்தியர் . எஸ் . லோகநாதன் மற்றும் டயஸ் போர லங்கா ( அவுஸ்திரேலியா ) இயக்குனர் ஜெரமி லியனகே ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் .
வாழ்த்துக் கவி கவிஞர் . மடவளை கலீல் அவர்களும் நூல் வெளியீட்டுரை சாகித்திய விருது நாயகன் எஸ்.ஏ. உதயன் அவர்களும் நூல் மதிப்பீட்டுரை பல்துறை விர்தகன் அ . நிசாந்தன் அவர்களும் வழங்கினர் .
மன்னாரில் கவிதை நூல் வெளியீட்டு விழா -படங்கள்
Reviewed by Author
on
November 25, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment