2015 பொதுநலவாய மாநாடு மொரிஸியஸில் நடைபெறாது: பிரதமர் நவின்
2015 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாடு மொரிஸியஸில் நடைபெறாது என்று மொரிஸியஸ் பிரதமர் நவின் ராம் கூலம் கூறியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினையை காரணமாக காட்டி பொதுநலவாய மாநாட்டை பகிஷ்கரிப்பதாக மொரிஸியஸ் பிரதமர் நவின் ராம் கூலம் அறிவித்தார்.
நான் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றப் போவதில்லை எனவும், மொரிஸியஸின் வெளிநாட்டமைச்சர் ஆவின் பூலெல் பிரதிநிதித்துவம் செய்வாரெனவும் பிரதமர் நவின் ராம் கூலம் கடந்த நாடாளுமன்றில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் பல்வேறு பக்கத்தாலும் அறிந்த வகையில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் போதியளவில் செயற்படவில்லை என அறிகிறேன் என ராம் கூலம் கூறியிருந்தார்.
நான் கொண்டுள்ள கொள்கையின் அடிப்படையில் என்னால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது எனக்கூறி மாநாட்டையும் புறக்கணித்தார்.
பிரதமரின் இந்த முடிவினால் 2015 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை மொரிஸியஸ் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Reviewed by Author
on
November 16, 2013
Rating:
Reviewed by Author
on
November 16, 2013
Rating:

No comments:
Post a Comment