சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது: கமரூனின் கோரிக்கையை பசில் நிராகரிப்பு
இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்த்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, ´அவ்வாறான விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது´ என்று கூறியுள்ளார்.
இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணையொன்றை நடத்த வேண்டுமென்று பிரித்தானிய பிரதமர் கமரூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்று அமைக்கப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை நடத்துமாறு ஐநாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கமரூன் காலக்கெடு விதித்துள்ளார்.
இலங்கையில் நடந்துவரும் காமன்வெல்த் உச்சிமாநாட்டின் போது, வடக்கே யாழ்ப்பாணம் சென்று தமிழ்த் தலைவர்களை சந்தித்து திரும்பிய பிரிட்டிஷ் பிரதமர் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து சுமார் ஒருமணிநேரம் பேச்சு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப்பட மாட்டாது: கமரூனின் கோரிக்கையை பசில் நிராகரிப்பு
Reviewed by Author
on
November 16, 2013
Rating:
Reviewed by Author
on
November 16, 2013
Rating:


No comments:
Post a Comment