ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கொழும்பில் மெழுகுவர்த்தி போராட்டம்
சர்வதேச தண்டனை நிறைவு நாள் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இலங்கை இதழியல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை மற்றும் உலகில் ஊடகத்துறை மற்றும் கலைத்துறைக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்கள் இதன்போது நினைவு கூறப்பட்டனர்.
அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை இதழியல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர் பழனி விஜயகுமார், இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி கொழும்பில் மெழுகுவர்த்தி போராட்டம்
Reviewed by Author
on
November 25, 2013
Rating:

No comments:
Post a Comment