நத்தார் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் -அயூப் அஸ்மின்
புனித நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைத்து கிறிஸ்த்தவ நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு இத்தருணத்தில் இச்செய்தியை வழங்குவதில் பெருமிதமடைகின்றேன்.
ஓவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ஆம் திகதியும் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பை ஞாபகப்படுத்துவதற்காக உலகிலுள்ள பலகோடி மக்களால் கொண்டாடப்படுகின்றது. வாழ்த்துக்கள் பரிமாறிக் கொள்வதும், புதிய ஆடைகளுடன் வலம் வருவதும், குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பதும், சுவையான உணவுகள் தயாரித்து உண்ணுவதும் அவற்றை தன் சொந்தங்கள் நண்பர்களுடன் பரிமாறுவதும் இப்பண்டிகை தினத்தை மேலும் மகிழ்ச்சியான உத்வேகமான தினமாக மாற்றுகின்றது. இந்த மகிழ்ச்சிகரமான நாளில் எமது மகிழ்ச்சியுடன் அனாதைகளை, கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை, குடும்பங்களை மற்றும் சொந்தங்களை இழந்து தவிப்போரை, கஷ்டப்படுகின்ற அனைவரையும் இணைத்துக் கொள்வோம்.
என்றாலும் எமது நாட்டில் இன்றைய சூழலில் இவ்வாறான ஒரு தினத்தை சிறந்த முறையில் கொண்டாட வாய்ப்பிருக்கிறதா என்பது பாரிய வினாவாகும். வாழ்க்கைச் செலவானது வானை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் நாட்டில் ஒரு சாராருக்கு மட்டுமே அல்லது அதிகாரத்தை முழுமையாக தன் கையில் வைத்திருக்கும் சிலருக்கே இப்பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த சாரார் அடுத்த வேளை உணவுக்கே கஷடப்படும் நிலையே பரவலாக காணப்படுகின்றது.
எனவே இந்நிலை வெகுவிரைவில் மாற்றப்பட வேண்டும். மாற்று வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும். எமது அடுத்த தலைமுறையினராவது இவ்வாறான நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இந்த உறுதியுடன் இந்நாளை நாம் கொண்டாடுவோம். மாற்றத்தை ஏற்படுத்த திடசங்கட்பம் பூணுவோம்.
மீண்டும் ஒருமுறை அனைவர் வாழ்விலும் சந்தோசத்தையும் அமைதியையும் ஏற்படுத்தும் நாளாக இந்நாள் அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
நத்தார் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் -அயூப் அஸ்மின்
Reviewed by Admin
on
December 24, 2013
Rating:

No comments:
Post a Comment