விவசாயிகள் பயிர் பாதிப்புக்களை வங்கிகளுக்கு தெரியப்படுத்தி கடனுக்கான காலநீடிப்பை பெறலாம். ஆர். ஸ்ரீ பத்மநாதன்.
இயற்கை அனர்த்தம் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களினால் பயிர்ச்செய்கை பாதிப்புக்குஉள்ளாகிய விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உரியமுறையில் வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தி விவசாய பயிர்ச்செய்கைகக்காகப் பெற்றுக்கொண்ட கடன்தொகையை மீளச் செலுத்துவதற்கான காலநீடிப்பை பெற்றுக்கொள்ள முடியும் .
அத்துடன் கிராமிய கொடு கடன்திட்டத்தின் கீழ் கடன்களை உரிய முறையில் விண்ணப்பித்து மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கை மத்திய வங்கியின் வறுமை ஒழிப்பு கடன் திட்ட ஆலோசகரும் கடன்குழுக்களின் தலைவருமான ஆர் . ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார் .
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மற்றும் நோய்த்தாக்கம் உள்ளிட்ட காரணங்களினால் விவசாயிகள் பருவ காலப் பயிர்ச்செய்கைக்கு பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்தாமை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் .
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வடபகுதியில் யுத்தத்தின் பின் ஏற்பட்ட அமைதி நிலையில் மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளும் நிதிநிறுவனங்களும் பெருமளவில் கடன்களை போட்டி போட்டுக்கொண்டு வழங்கின . அத்துடன் மழைவெள்ளம் காலந்தப்பிய மழை பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட நோய்த்தாக்கம் போன்ற காரணங்களினால் பயிர்ச்செய்கையில் பெரும்பாதிப்பு ஏற்பட்டமையினால் விவசாயிகள் வருமான இழப்பு க்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர் .
பலர் ஒரே நோக்கத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன்பெற்றுள்ளனர் . பயிர்ச்செய்கை இயற்கை அனர்த்தம் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க காரணிகளினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தவும் முடியாமல் இருப்பதோடு தொடர்ந்து பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது .
இவர்கள் தமக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக வங்கி முகாமையாளருடன் தொடர்பு கொண்டு தமது விளக்கத்தை உரிய முறையில் எழுத்து மூலம் சமர்ப்பித்து உரிய நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் .
இயற்கை அனர்த்தம் மற்றும் ஏற்றுக்கொள்ளவேண்டிய காரணங்களினால் பயிர்ச்செய்கை பாதிப்புக்கு உள்ளாகி வருமான இழப்புக்கு உள்ளாகிய விவசாயிகள் பெற்றுக்கொண்ட கடன்தொகையை இரண்டு வருட காலத்துக்குள்ளே தவணை முறையில் திருப்பிச் செலுத்துவதற்கும் . பயிர்ச்செய்கைக்கான பருவகால கடனுக்கு உரிய முறையில் விண்ணப்பித்து கடனைப் பெற்றுக்கொள்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது . இந்தச் சலுகை மத்தியவங்கியால் அனுமதிக்கப்பட்ட 23 வங்கிகளுக்கும் ஏற்புடையது என்றார் .
விவசாயிகள் பயிர் பாதிப்புக்களை வங்கிகளுக்கு தெரியப்படுத்தி கடனுக்கான காலநீடிப்பை பெறலாம். ஆர். ஸ்ரீ பத்மநாதன்.
Reviewed by Admin
on
December 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment