வடமாகாணத்தில் குறுந் திரைப்படங்களின் நிலை பற்றி ஆராய்ந்த ஒன்றுகூடல் நிகழ்வு
வடமாகாணத்தில் குறுந் திரைப்படங்களின் வருகையும் மீள் பார்வையும் என்னும் தொனிப் பொருளில் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கடந்த 15ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இல-128,பிறவுண் வீதியிலுள்ள Nation Popular Travels And Tours நிறுவன முன் மண்டபத்தில் நடைபெற்றது.
பிற்பகல் 05 மணி முதல் நடைபெற்ற இந் நிகழ்வில் எவ்வாறான குறுந் திரைப்படங்களைத் தயாரிப்பது சிறந்தது?, திரைப்படங்களைத் தயாரிப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதுமட்டுமன்றி வடமாகாணத்திற்கென செயற்திறன் மிக்க ஒரு திரைப்பட சங்கத்தை உருவாக்குவதென்றும், எதிர்காலத்தில் இச் சங்கத்தின் மூலமாக நிதிகளைப் பெற்று எமது கலைஞர்களின் திறமைகளை வளர்ப்பதற்கான முன்னகர்வுகளை மேற்கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகாணக் குறுந் திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது அபிப்பிராயங்களை வெளியிட்டனர். இதன் போது முற்று முழுததாக யாழ்.கலைஞர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட “நெஞ்சே எழு”என்ற திரைப்படத்தின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது.
வடமாகாணத்தில் குறுந் திரைப்படங்களின் நிலை பற்றி ஆராய்ந்த ஒன்றுகூடல் நிகழ்வு
Reviewed by Admin
on
December 21, 2013
Rating:
Reviewed by Admin
on
December 21, 2013
Rating:


No comments:
Post a Comment