முல்லைத்தீவில் பஸ் விபத்து: 6 பேர் படுகாயம்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அரச ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வந்த மினிபஸ் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறத்திலேயே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் மினி பஸ்ஸின் சாரதி உட்பட ஐவரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் புதுக்குக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவில் பஸ் விபத்து: 6 பேர் படுகாயம்
Reviewed by Admin
on
December 21, 2013
Rating:
Reviewed by Admin
on
December 21, 2013
Rating:



No comments:
Post a Comment