முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்: 6 வயது சிறுவன் படுகாயம்
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் நேற்று மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் 6 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.
இவ்விபத்தில், செல்வராசா சுதாகரன் என்ற சிறுவனே படுகாயமடைந்து, முல்லைத்தீவு முள்ளியவளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயிர்ச் செய்கைக்காக நிலத்தை உழுதும் போது, வித்தியாசமான பொருளொன்று வெளியில் தெரிந்துள்ளது.
இதன்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குறித்த சிறுவன் அதனை எடுத்தபோது வெடித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவில் வெடிப்புச் சம்பவம்: 6 வயது சிறுவன் படுகாயம்
Reviewed by Admin
on
December 25, 2013
Rating:

No comments:
Post a Comment