மன்னார் மாவட்டத்தில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கான போட்டி.
மன்னார் மாவட்டத்தில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளரை தெரிவு செய்து பரிவு வழங்கும்
திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பொ . அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார் .
இவ் வீட்டுத்தோட்ட போட்டியானது விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் நடாத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் பிரதேச செயலாளர் பிரிவு ரீதியான போட்டிக்குச் செல்வர் .
இதில் முதலாம் இடத்தைப் பெறும் போட்டியாளர்களிடையே மாவட்ட மட்ட மதீப்பீடு நடைபெற்று இருதியாக மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் .
இவ்வாறு மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களில் 1 ஆம் பரிவு -15,000 ரூபாவும் , 2 ஆம் பரிசு -12,000 ரூபாவும் , 3 ஆம் பரிசு -10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது .
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீட்டுத்தோட்ட செய்கையாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள விவசாய போதனாசிரியர் அலுவலகத்தில் போட்டி விதிமுறைகள் பற்றிய முழுமையான விபரங்களை பார்வையிட்டு போட்டிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை 20 ஆம் திகதி மார்கழி மாதம் 2013 க்கு முன்னர் ( 20-12-2013 ) விவசாயப் போதனாசிரியருக்கு அல்லது பிரதி விவசாயப்பணிப்பாளர் ( விரி ) அலுவலகம் , மன்னாருக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும் .
அல்லது நேரடியாகவும் விண்ணப்ப படிவங்களை மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் கையளிக்க முடியும் .
கடித உறையின் இடது பக்க மேற்பக்கத்தில் சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளருக்கான போட்டி -2013 எனக்குறிப்பிடப்படல் வேண்டும் .
மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு தைப்பொங்கல் தினத்தினை ஒட்டி நடைபெறும் உழவர் விழாவில் வடமாகாண விவசாய , கமநல சேவைகள் , கால்நடை அபிவிருத்தி , நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ . ஐங்கரநேசனினால் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது .
எனவே சகல வீட்டுத்தோட்ட செய்கையாளர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும் எனவும் , மேலதிக விபரங்களுக்கு அருகில் உள்ள விவசாய போதனாசிரியரை நாடுமாறு மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் பொ . அற்புதச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார் .
மன்னார் மாவட்டத்தில் சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கான போட்டி.
Reviewed by NEWMANNAR
on
December 11, 2013
Rating:

No comments:
Post a Comment