அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழி தோண்டும் பணி வரும் 3ம் திகதி வரை நிறுத்தம்!

இலங்கையின் வடக்கு மாகாணம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி ஆகும். அங்குள்ள மன்னார் மாவட்டம், திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தேசிய குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர்.

அதற்காக மண்ணை தோண்டியபோது, அங்கு மண்டை ஓடுகள் அடுத்தடுத்து கிடைத்தன. இதனால் அந்த இடம் இராட்சத சவக்குழியாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதையடுத்து, அங்கு தோண்டிப் பார்த்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கடந்த வாரம் உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அங்கு தோண்டும் பணி நடந்தது. அதில், பாளம், பாளமாக எலும்புக் கூடுகளும் மண்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், தோண்டும் பணியை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கேட்டபோது, மருத்துவ அதிகாரி தனஞ்சய வைத்யரத்ன கூறியதாவது:-

நாங்கள் தோண்டிய போது, ஏராளமான எலும்புக் கூடுகள் கிடைத்தன. இருப்பினும், தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் ஒத்துழைப்பு இல்லாமல் மேற்கொண்டு தோண்ட இயலாது.

எனவே, தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் உதவி கிடைக்கும் வரை, அதாவது ஜனவரி 3-ந் தேதி வரை, தோண்டும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழி தோண்டும் பணி வரும் 3ம் திகதி வரை நிறுத்தம்! Reviewed by Admin on December 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.