பொலிஸ் விசேட தினத்தை முன்னெடுக்கத் தீர்மானம்
பொதுமக்களுக்கு உதவும் வகையில் பொலிஸ் விசேட தினத்தை மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் ஊடாக இந்தத் தினம் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
தற்போது வெள்ளிக்கிழமைகளில் பொலிஸ் தலைமையகத்தில், பொலிஸ் விசேட தினம் முன்னெக்கப்படுவதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களில மாதாந்தம் இரண்டாம் மற்றும் நான்காம் புதன்கிழமைகளில் மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் தலைமையில் இந்தத் தினம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்ட மட்டத்தில் முதலாம் மற்றும் மூன்றாம் புதன்கிழமைகளில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் தலைமையில் இந்தத் தினம் நடத்தப்படுமென அவர் தெரிவித்தார்.
மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொள்ளும் நோக்கில் இந்தத் தினம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
பொலிஸ் விசேட தினத்தை முன்னெடுக்கத் தீர்மானம்
Reviewed by Admin
on
December 24, 2013
Rating:

No comments:
Post a Comment