அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட மீனவர்கள், விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் அவசரக் கூட்டம்

மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கூட்டம் ஒன்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. இதன் போது அண்மைக்காலங்களாக ஏற்பட்டு வரும் அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது. 

 விவசாயம் செய்பவர்கள் மழை இல்லாததன் காரணத்தினால் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் மாற்று பயிர்கள் பயிரிடுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதே வேளை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் நஸ்டஈடு பாதிப்பு நிவாரணம் ஆகியவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

 மன்னார் மாவட்டத்தில் 26 ஆயிரம் விவசாயிகளும், 9 ஆயிரம் மீனவர்களும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த அவசர கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் உற்பட கடற்தொழில், விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனஅதிகாரிகள், திடீர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்ட மீனவர்கள், விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் அவசரக் கூட்டம் Reviewed by Admin on December 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.